News January 1, 2025
கொள்ளையடிக்க மாச சம்பளம்: சாப்பாடு, தங்குமிடம் FREE

IT-யில் வேலை பார்ப்பவர்களுக்கு இணையாக கொள்ளை கும்பலிலும் சலுகைகள் இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? உ.பி.யில் செல்போன் திருடும் கும்பல் மாதம் ₹15,000, இலவச உணவு, பயணச் செலவு என சலுகைகள் வழங்குகிறது. கொள்ளை சம்பவத்தில் ஒன்றில் கைதான பிறகு, ஜார்கண்டை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரது இந்த கும்பல் பற்றி தகவல் வெளிவந்துள்ளது. உடனே நெட்டிசன்கள் வேலைக்கு நாங்க வரலாமா? என கலாய்த்து வருகிறார்கள்.
Similar News
News December 6, 2025
ROKO❤️❤️ இன்றி எதுவும் சாத்தியமில்லை

டெஸ்ட் தொடரை இழந்த வருத்தத்தில் இருந்து, இந்திய ரசிகர்களுக்கு ROKO ஜோடி பெரும் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. SA ODI தொடரில் ரோஹித் 2 அரை சதங்களுடன் 146 ரன்களையும், விராட் 2 சதம் ஒரு அரைசதத்துடன் 302 ரன்களையும் குவித்துள்ளனர். SA-வின் வலுவான பேட்டிங்கிற்கு, பதிலடி கொடுக்க இருவரின் ஆட்டமே முக்கிய பங்காற்றியுள்ளது. 2027 உலகக் கோப்பையை ROKO இன்றி யோசிக்க முடியாத அளவிற்கு விளையாடியுள்ளனர்.
News December 6, 2025
ஆண்மை குறைபாட்டை நீக்கும் முருங்கைப்பூ

நாம் முருங்கை காய் மற்றும் கீரைகளை சமைத்து உண்டு ருசித்திருப்போம். ஆனால், முருங்கைப்பூவில் இருக்கும் சத்துகள் மற்றும் ரகசியம் நம்மில் பலரும் தெரியாது. பல்வேறு நன்மைகள் உள்ளன. அவை என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த முருங்கைப்பூ நன்மைகளை கமெண்ட்ல சொல்லுங்க.
News December 6, 2025
கூகுள் பட்டியலில் இடம் பிடித்த ஒரே நேரடி தமிழ் படம்!

2025-ல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியிலில், ஒரே நேரடி தமிழ் படமாக ‘கூலி’ 3-ம் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல், ஷங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவான ‘கேம்சேஞ்சர்’ 8-ம் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில், ஹிந்தி படமான ‘சயாரா’ முதலிடத்தையும், கன்னடப் படமான ‘காந்தாரா சாப்டர் 1’ 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது.


