News March 31, 2025
மாதம் ரூ.1 லட்சம் சம்பளம்.. நாளை முதல் IT இல்லை

புதிய வருமான வரி திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ரூ.7 லட்சத்துக்கும் மேல் சம்பளம் ஈட்டுவோர் IT செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் அண்மையில் தாக்கலான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது. இது நாளை (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, இனி ஆண்டுக்கு ரூ.12 லட்சம், அதாவது மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் பெறுவோர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
Similar News
News April 2, 2025
வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல்

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு பின்பு வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. கடந்த ஜனவரியில் மக்களவைத் தலைவரிடம் அறிக்கையைக் கூட்டுக் குழு சமர்ப்பித்தது. அறிக்கை கடந்த பிப்., மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
News April 2, 2025
சூர்யா படத்தால் கார்த்தி படத்திற்கு சிக்கல்

கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் தான் 2024 நவம்பரிலேயே டீசர் வெளியிடப்பட்டது. ஆனால், தற்போது வரை அந்த படம் எப்போதும் வெளியாகும் என தெரியவில்லை. இப்படத்தை தயாரித்துள்ள ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், ‘கங்குவா’, ‘தங்கலான்’ தோல்வியால் நிதிச் சிக்கலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த பஞ்சாயத்தை முடித்தால் மட்டுமே கார்த்தி படம் வெளியாகுமாம்.
News April 2, 2025
பழைய பஸ்களுக்கு விரைவில் Good Bye: அமைச்சர்

தமிழகத்தில் இயங்கி வரும் பழைய பஸ்கள் விரைவில் மாற்றி அமைக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் புதிய பஸ்கள் வாங்க டெண்டர் விடப்படுவதாகவும், அந்த வகையில் தற்போது மாநிலம் முழுவதும் 3,500 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு வாரமும் புதிய பஸ்களை கொண்டு பழைய பஸ்கள் மாற்றி இயக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.