News April 14, 2025
மாதந்தோறும் ரூ.1,000 திட்டம்: கூடுதல் மாணவர்கள் சேர்ப்பு

NMMSS தேர்வு மூலம் 1 லட்சம் 8-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 9 முதல் 12-ம் வகுப்பு வரை மத்திய அரசு ரூ.1,000 உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்தத் தேர்வில் இதுவரை தமிழகத்தில் இருந்து 5,890 மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கையை 6, 695ஆக மத்திய அரசு அதிகரித்துள்ளது. இந்தத் தேர்வுக்கான ரிசல்ட் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. செக் பண்ணிக்கோங்க.
Similar News
News January 18, 2026
திமுக – காங்., ஒருவரை ஒருவர் முடித்துக்கொள்வர்: தமிழிசை

திமுக- காங்., இடையே நம்பிக்கையில்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். அவர்களிடையே கூட்டணி தொடருமா என்பதை சொல்ல முடியவில்லை என்ற அவர், 1967-ல் காங்கிரஸை திமுக முடித்தது; இப்போது ஒருவரை ஒருவர் முடித்துக் கொள்வார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் அநீதியும் முடிந்துபோகும், மிகவும் மோசமான ஆட்சியும் முடிந்துபோகும். 2026 NDA கூட்டணிக்கானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
News January 18, 2026
வெற்றிக் கூட்டணியை பாமக அமைக்கும்: ராமதாஸ்

விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் வியூகம் குறித்து பாமகவின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதான் நாணயமான கூட்டணி என மக்கள் பேசுகின்ற அளவிற்கு கூட்டணி அமையும் என்றும், அப்படிப்பட்ட கூட்டணியை உருவாக்க தீவிரமாக முயன்று வருவதாகவும் கூறியுள்ளார்.
News January 18, 2026
தமிழ் திரைப்பட எடிட்டர் காலமானார்

‘டிஷ்யூம்’, ‘ரோஜாக்கூட்டம்’ ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய பீட்டர் பாபியா (58) காலமானார். நெஞ்சுவலியால் சிகிச்சை பெற்றுவந்த பாபியா, அவரது சொந்த ஊரான சேலம் அஸ்தம்பட்டியில் பஸ்ஸில் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர், ஹாஸ்பிடல் சென்றபோது அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். பாபியாவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


