News December 20, 2024
மாதந்தோறும் மின் கட்டணம்: முதல்வர் உறுதி

ஒவ்வொரு மாதமும் மின்சாரம் கணக்கீடு செய்யும் முறையை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார். ஈரோட்டில் அவர் விசைத்தறி உரிமையாளர்களை சந்தித்து உரையாடினார். அப்போது அவர்கள் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிட்டு செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு முதல்வர் இவ்வாறு பதிலளித்தார்.
Similar News
News April 10, 2026
கட்சி மாறுகிறாரா விஜயகாந்தின் வலதுகரம்?

திமுக கூட்டணியில் இணைந்து 10 தொகுதிகளை பெற்றுள்ள பிரேமலதா, விஜயகாந்தின் வலதுகரமாக வலம் வந்த EX MLA பார்த்தசாரதிக்கு சீட் கொடுக்கவில்லை. விஜயகாந்த் மறைவுக்கு பிறகும் தேமுதிகவின் இரண்டாம் கட்ட நிர்வாகியாக இருந்த பார்த்தசாரதி, கட்சியின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றியவர். ஆனால், சீட் மறுக்கப்பட்டதால் கடந்த சில நாள்களாக அடிருப்தியில் இருக்கும் அவர், கட்சி மாற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News April 10, 2026
அண்ணாமலை பற்றி பேசிய SP வேலுமணி

அண்ணாமலை எது கேட்டாலும் பாஜக கொடுக்கும் என SP வேலுமணி பேசியுள்ளார். அவருக்கு சீட் கிடைக்காததில் தங்களுக்கு பங்கு இல்லை என்ற அவர், யார் யாருக்கு சீட் என்பதை பாஜக தான் முடிவு செய்தது என தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும், அண்ணாமலை, கோவை மட்டுமின்றி எங்கு வேண்டுமானாலும் நிற்கக்கூடிய சூழல் இருப்பதாகவும், பிரசாரத்துக்கு அவரை பயன்படுத்தலாம் என பாஜக நினைத்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News April 10, 2026
நெஞ்சு சளி நீங்க இந்த கசாயத்தை குடிங்க!

➤தேவை: கற்பூரவள்ளி, துளசி, வெற்றிலை, இஞ்சி, மிளகு, சீரகம் ➤செய்முறை: வெந்நீரில் தலா 5 கற்பூரவள்ளி & துளசி இலைகளை சேர்க்கவும். பின்னர், வெற்றிலையின் நரம்பை காம்போ நீக்கிவிட்டு அதனுடன் சேர்க்கவும். மிளகு, இஞ்சி, சீரகத்தை இடித்து சேர்க்கவும். ஒன்றரை கிளாஸ் தண்ணீர் 1 கிளாஸ் அளவிற்கு வரும் வரை நன்கு கொதிக்கவிட்டு, அடுப்பை அணைத்து வடிகட்டி ஆறவைத்து குடிக்கலாம் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.


