News October 27, 2025

MONTHA: சென்னையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

வங்க கடலில் உருவாகியுள்ள மோன்தா புயலால் சென்னை துறைமுகம் மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் இருந்து 640 கி.மீ தொலைவில் உள்ள புயல் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும், சென்னையில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 27, 2025

சென்னை: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; PHONE போதும்!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.<>இங்கு க்ளிக்<<>> பண்ணி பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு செய்யுங்க. 2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க 3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. 7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News October 27, 2025

சென்னையை பதம் பார்க்கும் ‘மோன்தா’

image

வங்கக்கடலில் மோன்தா புயல் நேற்று நள்ளிரவு உருவான நிலையில் இன்று (அக்.27) சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காலை முதலே சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய துவங்கியுள்ளது. நாளை தீவிர புயலாக மாறும் மோன்தா ஆந்திரா மாநிலம் காக்கிநாடா பகுதியில் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களே முன்னெச்சரிக்கையா இருங்க.

News October 27, 2025

சென்னை: கபடி வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை!

image

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீராங்கனை கார்த்திகா மற்றும் ரமேஷ் ஆகியோர் பதக்கம் வென்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு முதல்வர் ஊக்கத்தொகையாக ரூபாய் 25 இலட்சத்திற்கான காசோலையை வழங்கி, வாழ்த்தினார். இந்நிகழ்வின்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!