News March 1, 2025

பணப்பரிவர்த்தனை: வாட்ஸ்அப் விரைவில் புதிய வசதி

image

கூகுள் பே, போன் பே போன்று வாட்ஸ்அப் சமூகவலைதளமும் பணப்பரிவர்த்தனை வசதியை வழங்கி வருகிறது. இந்நிலையில், குறைந்த அளவு பணப்பரிவர்த்தனைக்காக வாட்ஸ்அப் தற்போது UPI LITE என்ற வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இதை தற்போது வாட்ஸ்அப் பரிசோதித்து வருகிறது. பரிசோதனை முடிந்ததும் அது அறிமுகப்படுத்தப்படும். அது அமலுக்கு வந்தால், விரைந்து பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என கூறப்படுகிறது.

Similar News

News March 1, 2025

திமுக ஆட்சி மீண்டும் வேண்டும்: திருமாவளவன்

image

இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆற்றல் வாய்ந்த தலைவராக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக திருமாவளவன் பாராட்டியுள்ளார். முதல்வரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்த மண்ணையும், மக்களையும் பாதுகாக்க மீண்டும் திமுகவை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்றார். பெரியாரின் கருத்தியலையும், அம்பேத்கரின் சிந்தனைகளையும் பாதுகாக்க தமிழகத்தில் பாஜக காலூன்ற விடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

News March 1, 2025

சின்னப்பசங்க அப்படித்தான் பேசுவார்கள்: முத்தரசன்

image

பாசிசம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் பாயாசம் பற்றி பேசுவதாக தவெக தலைவர் விஜயை CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். அரசியலில் ஆர்வம் காட்டுகிறவர்கள் ஹிட்லரை படித்து, பாசிசம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். சின்னப் பிள்ளைகள் அப்படிதான் பேசுவார்கள், அதை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 1, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பயனில சொல்லாமை
▶குறள் எண்: 193
▶குறள்:
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
▶பொருள்: ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

error: Content is protected !!