News May 17, 2024
இந்த ராசிகள் காட்டில் பண மழை

மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சூரிய பகவான் இடம்பெயர்ந்துள்ளதால், மேஷம், ரிஷபம், கடகம், சிம்ம ராசியினர் அதிர்ஷ்டம் பெற உள்ளனர். அடுத்த ஒரு மாத காலம் சிறப்பாக இருக்கும், வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
Similar News
News March 6, 2026
சற்றுமுன்: ரூ.2,500 பணம்.. ஸ்டாலின் மகிழ்ச்சி அறிவிப்பு

ரேஷன் கடை ஊழியர்களுக்கு பல்வேறு புதிய சம்பள விவர அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, நியாயவிலைக் கடை படி, ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விற்பனையாளர்களுக்கு ₹1,500, ₹1,750, ₹2,000 என்ற வகையிலும், கட்டுநர்களுக்கு ₹1,000, ₹1,250, ₹1,500 என்றும் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான பயணப்படி தற்போதுள்ளவாறு ₹2,500 ஆகவே வழங்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News March 6, 2026
இந்தியாவுக்கு அனுமதி வழங்க USA யார்? ஜோதிமணி

இந்தியா யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும், எவ்வளவு காலம் வாங்கவேண்டும் என்பதை ஆணையிட அமெரிக்கா யார் என ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது நிறுத்தப்பட வேண்டும் என்ற அவர், இதற்கு PM மோடி மக்களுக்கும் நாடாளுமன்றத்திலும் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், டிரம்ப் மீதான மோடியின் குருட்டுத்தனமான மரியாதையால் ஏற்கனவே இந்தியா பெரும் விலையை கொடுத்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 6, 2026
சனிப்பெயர்ச்சி: நற்பலன்கள் பெற பொதுவான பரிகாரங்கள்

சனிப்பெயர்ச்சி பரிகாரம்: *தினசரி விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலன் தரும். *விநாயகர் அகவல், ஹனுமான் சாலீசா, சுந்தரகாண்டம் பாராயணம் ஆகியவற்றை தினமும் மேற்கொள்ளலாம். *அவ்வப்போது கணபதி ஹோமம் (அ) பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமம் செய்யலாம். *தினமும் முன்னோர்கள் வழிபாடு செய்வது (குறைந்தபட்சம் அமாவாசை தினத்தன்றாவது). *தினமும் காகத்திற்கு சாதம் வைப்பதும் சிறந்த பரிகாரமாகும் என்கின்றனர் நம்பிக்கையுள்ளோர்.


