News March 15, 2025
வங்கிக் கணக்கில் வருகிறது பணம்

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 15ஆம் தேதி ₹1,000 மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அந்தவகையில், இந்த மாதத்திற்கான உதவித்தொகை இன்று காலை 9.30 மணிக்கு மேல் பயனாளிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதனிடையே, நேற்றைய பட்ஜெட்டில் விடுபட்ட பயனாளிகள் புதிதாக விண்ணப்பிக்க, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு நற்செய்தி கூறியுள்ளார்.
Similar News
News March 9, 2026
குடும்பம் தானே எல்லாம்… வைரல் PHOTOS

T20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினரின் கொண்டாட்ட போட்டோக்கள் தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரல். தங்களின் கடின உழைப்பின் பலனாக பெற்ற மாபெரும் வெற்றியை சக அணியினருடன் மட்டுமல்லாமல் குடும்பத்தினருடனும் சேர்ந்து கொண்டாடினர். வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சி பொங்கிய போட்டோஸை மேலே இணைத்துள்ளோம். இடப்பக்கமாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.
News March 9, 2026
தங்கம் விலை சவரனுக்கு ₹6,600 குறைந்தது

மேற்கு ஆசியாவில் போர் தொடங்கியபோது சர்ரென ஏறிய தங்கம் விலை, தற்போது மளமளவென குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 1-ம் தேதி சவரன் ₹1,26,200-க்கு விற்பனையான தங்கம், <<19334448>>இன்று ₹1,19,600-க்கு<<>> விற்பனையாகிறது. அதாவது சவரனுக்கு ₹6,600 குறைந்துள்ளது. போர் சூழல் காரணமாக இஸ்ரேல், ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் பலரும் தங்கத்தை விற்பனை செய்து வருவதே விலை சரிவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
News March 9, 2026
இஸ்ரேல் மீது டிரம்ப் அதிருப்தி

ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே முதல்முறையாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 30 ஈரானிய எண்ணெய் கிடங்குகள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து அமெரிக்கா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது எண்ணெய் விலை பீப்பாய்க்கு ₹9,227ஐ தாண்டியுள்ளது. இதுமேலும் உயர்ந்தால் உலக பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்படும்.


