News February 27, 2025
பால் உற்பத்தியாளர் வங்கிக் கணக்கில் பணம்: அமைச்சர்

தமிழக அரசு வழங்கும் ஊக்கத் தொகை, பால் உற்பத்தியாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் பால்வளத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆவின் பால், தயிர், மோர், நெய், லஸ்ஸி, ஐஸ்க்ரீம் விற்பனையை அதிகரிக்கவும், பால் கொள்முதலை அதிகரிக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
Similar News
News February 27, 2025
நடிகர் திடீர் மரணம்: புதுத் தகவல்

<<15598992>>ஹாலிவுட் <<>>நடிகர் ஜென் ஹேக்மேன், மனைவி பெட்ஸியுடன் வீட்டில் வளர்ப்பு நாயும் வீட்டில் இறந்து கிடந்துள்ளது. ஆனால் 3 பேரும் உயிரிழந்தது எப்படி என சரியாகத் தெரியவில்லை. ஹேக்மேன் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சுமார் ரூ.697 கோடி சொத்துகளுக்கு அதிபதி ஆவார். 1991இல்தான் 2ஆவதாக பெட்ஸியை திருமணம் செய்துள்ளார். சில ஆண்டுகளாக இருவரும் வெளியே அதிகம் வராமல் இருந்துள்ளனர்.
News February 27, 2025
அரிசி விலை மூட்டைக்கு ரூ.50 குறைப்பு

மாநிலத்தில் அரிசி மொத்த விலை கிலாே ரூ.2 குறைக்கப்படுவதாக அரிசி ஆலை உரிமையாளர்கள், வணிகர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். பிற மாநிலங்களில் இருந்து நெல் வரத்து அதிகரித்ததால், சன்னம், மிக சன்னம், பிபிடி, 1638 ரக அரிசிகளின் விலை குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். சில்லரை விலையில் கிலோ ரூ.1.50 குறையக்கூடும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த அறிவிப்பால், 25 கிலோ அரிசி மூட்டை ரூ.50 குறைக்கப்பட்டுள்ளது.
News February 27, 2025
29 ஆண்டுகளில் இல்லாத சரிவு

இந்திய பங்குச்சந்தைகள் 5 மாதங்களாக தொடர்ந்து சரிந்து 29 ஆண்டுகால மோசமான சாதனையை முறியடித்துள்ளது. செப்டம்பர் மாதம் 26,216 புள்ளிகளுடன் உச்சம் தொட்ட நிஃப்டி, 4 மாதங்களாக தொடர்ந்து சரிந்து தற்போது 22,545 புள்ளிகளாக உள்ளது. இதற்கு முன், 1994ஆம் ஆண்டு தொடர்ந்து 8 மாதங்கள் சந்தை சரிவை கண்டது. இதனால், முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஆனால், சந்தை மேலும் விழ வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.