News March 19, 2024
ரஜினி பெயரை சொல்லி பண மோசடி

ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, பெங்களூருவில் பெண் ஒருவரிடம் ரூ.3.9 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் 171வது படத்தில் நடிக்க நடிகர், நடிகையர் தேர்வு நடப்பதாக சமூகவலைதளத்தில் விளம்பரம் வந்துள்ளது. இதை நம்பிச் சென்ற மிருதுளாவிடம், ஒரு கும்பல் பணம் வாங்கிக்கொண்டு ஓடிவிட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
BREAKING: மதுரை காவல் ஆணையர் ஆஜராக உத்தரவு.!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், காவல் ஆணையர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் பத்து நிமிடத்தில் காணொளி மூலம் ஆஜராக நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். தீபத்தூணில் தீபம் ஏற்ற காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டும், பாதுகாப்பு வழங்காதது ஏன் என விளக்கம் தர உத்தரவிடபட்டுள்ளது.
News December 4, 2025
மோடி அரசே ரூபாய் மதிப்பு குறைவுக்கு காரணம்: கார்கே

மத்திய அரசின் கொள்கைகளே ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கு காரணம் என மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். மோடி அரசின் திட்டங்கள் சரியானதாக இருந்தால் ரூபாயின் மதிப்பு சரிந்திருக்காது எனவும் அவர் சாடியுள்ளார். 2014-ல் குஜராத் CM-ஆக இருந்த மோடி, ரூபாய் மதிப்பு குறைந்ததற்கு காங்கிரஸை குற்றம்சாட்டியதை சுட்டிக்காட்டி, இப்போது நீங்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என PM-யிடம் கார்கே கேட்டுள்ளார்.
News December 4, 2025
சற்றுமுன்: Ex ஆளுநர் காலமானார்

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கவுஷல் (73) இன்று காலமானார். மூத்த வழக்கறிஞரான ஸ்வராஜ், மிசோரம் மாநில முன்னாள் கவர்னர் ஆவார். இவரது மறைவுக்கு பாஜக உள்பட பல கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஸ்வராஜ் கவுஷல், தனது கடின உழைப்பால் நாட்டிற்கு நிகரில்லா பணிகளை செய்துள்ளார் என பாஜக புகழஞ்சலி செலுத்தியுள்ளது.


