News April 19, 2024
வாக்குக்கு பணம்? உரிமையை பறித்துவிடும்

தேர்தலில் வாக்களிப்பது அனைவரின் ஜனநாயகக் கடமையாகும். இதில் வாக்களிக்க பணம் பெறுவதும், பரிசுப் பொருள் வாங்குவதும் மிகப்பெரும் தவறாகும். இதுபோல பணம், பரிசுப் பொருள் தந்து ஒருவர் தேர்தலில் வெற்றி பெறும்பட்சத்தில், செலவை மீட்டெடுக்க எதையும் செய்வார். அத்துடன் அவரை நேரில் சந்தித்து கோரிக்கை குறித்து மக்கள் கேள்வி எழுப்பவும் முடியாது. இதை வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Similar News
News May 7, 2025
தங்கத்தை விட அதிகமாக விலை உயர்ந்தது இதுதான்..!

இந்தியாவில் கடந்த 4 நாள்களில் தங்கத்தைவிட அதிக விலை உயர்வை கண்டிருக்கிறது குங்குமப்பூ. பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்திய – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுவதால் வாகா எல்லை மூடப்பட்டது. இதனால், ஆப்கானில் இருந்து குங்குமப்பூ இறக்குமதி செய்வது தடைபட்டது. தற்போது, 1 கிலோ குங்குமப்பூவின் விலை 10% வரை அதிகரித்து ₹5 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது 50 கிராம் தங்கத்திற்கு சமமாம்.
News May 7, 2025
பாஜக மூத்த தலைவர் நரேந்திர சலுஜா காலமானார்

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான நரேந்திர சலுஜா (58) மாரடைப்பால் காலமானார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். சேஹோரில் திருமண விழா ஒன்றில் பங்கேற்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாஜகவில் சேருவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் கமல்நாத்திற்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.
News May 7, 2025
செல்லப்பிராணி ஹேப்பியை இழந்த அம்பானி குடும்பம்..!

அம்பானி வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த ‘ஹேப்பி’ என்ற கோல்டன் ரெட்ரீவர் வகை நாய் திடீரென மரணமடைந்துள்ளது. நடந்து முடிந்த ஆனந்த் அம்பானி குடும்ப திருமணத்திலும், ஜாலியாக வலம் வந்து பலரையும் கவர்ந்திருந்தது ஹேப்பி. ஹேப்பியின் மறைவால் அம்பானியின் குடும்பமே சோகத்தில் மூழ்கி உள்ளது. நீ என்றென்றும் எங்கள் இதயங்களில் வாழ்ந்துகொண்டு தான் இருப்பாய் என அம்பானி பேமிலி இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.