News August 15, 2024

கார் ரேஸூக்கு பணமிருக்கு, புத்தகத்திற்கு காசு இல்லை: DJ

image

பாடநூல் விலை உயர்வுக்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது X பக்க பதிவில், நடுத்தர குடும்பத்தில் பிறந்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்கிற பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான கல்வி கனவில் கூட கல்லை தூக்கி போட்டுள்ளது திமுக அரசு என விமர்சித்துள்ளார். கார்ப்பரேட் அரசுக்கு கார் ரேஸ் நடத்த காசு இருக்கு, ஏழை பிள்ளைகளுக்கு புத்தகத்தை விலை குறைவாக கொடுக்க காசு இல்லை எனவும் அவர் சாடியுள்ளார்.

Similar News

News November 25, 2025

நாங்கள் மடசாம்பிராணியாக இருக்கிறோம்: செல்லூர் ராஜு

image

மதுரையில் நடைபெற்று வரும் SIR பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம் என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். SIR பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பலருக்கு, அதனை அப்லோட் செய்வது எப்படி என தெரியவில்லை, சிலருக்கு Internet வசதி இல்லை, சிலருக்கு அதற்கேற்ப மொபைல் போன் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்படி இருந்தால், SIR-ன் நோக்கம் நிறைவேறாது என்றும் கூறினார்.

News November 25, 2025

திரைப்பட விழாவில் கெத்து காட்டும் பாட்ஷா

image

‘ஐயா என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேரும் இருக்கு’ என்று பேசும் ரஜினியின் முகத்தில் தெரியும் மாஸே வேற லெவல் தான். அப்படிப்பட்ட ‘பாட்ஷா’ படம், கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. இவ்விழாவில், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் கெளரவிக்கப்படவுள்ள நிலையில், இத்திரையிடலும் அதில் இடம்பெற்றுள்ளது. பாட்ஷாவில் உங்களுக்கு பிடித்த சீன் எது?

News November 25, 2025

நவம்பர் 25: வரலாற்றில் இன்று

image

*பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women).
*1839 – ஆந்திராவில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியால் கொரிங்கா நகரம் முற்றிலும் சேதமடைந்தது. 30,000 பேர் வரை உயிரிழந்தனர்.
*2016 – பிடல் காஸ்ட்ரோ நினைவுநாள்.

error: Content is protected !!