News August 20, 2025
3 மணி நேரத்தில் பணம் டெபாசிட்.. விரைவில் அமல்!

காசோலைகளை பணமாக்க தற்போது 2 நாள்கள் வரை ஆகிறது. பணமாக்கும் செயல்பாட்டுக்கு CTS முறை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், 3 மணி நேரத்தில் காசோலையை பணமாக மாற்றும் முறையை செயல்படுத்த வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தியுள்ளது. Continuous Clearing, Settlement on Realisation முறையில் இச்செயல்பாடு விரைவாக முடிக்கப்படும். அக்.4 முதல் அமலுக்கு வரும் புதிய முறையால் தனிநபர்கள், நிறுவனங்களின் சிரமம் குறையும்.
Similar News
News August 21, 2025
CPR-க்கு தமிழக கட்சிகள் ஆதரவு தாருங்கள்: அண்ணாமலை

தமிழக அரசியல் கட்சிகள் CPR-க்கு ஆதரவு தர வேண்டுமென அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், CM, PM குற்றம் புரிந்தால் பதவிநீக்கம் செய்வதற்கான மசோதா குறித்து பேசிய அவர், மத்திய அரசால் தற்போது கொண்டு வரப்படும் புதிய சட்டம் வரவேற்கத்தக்கது என்றார். இச்சட்டத்தால் தவறு செய்தவர்கள் சிறைக்கு செல்வர் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் ஏற்படும் என்றார்.
News August 21, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 434 ▶குறள்: குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை. ▶ பொருள்: குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
News August 21, 2025
அபார வளர்ச்சி கண்ட CSK வீரர்

ஆஸி., தொடருக்கு முன்னதாக 101-வது இடத்தில் இருந்தார் SA மற்றும் CSK வீரருமான டெவால்டு பிரேவிஸ். ஆஸி., தொடரில் தனது அதிரடி ஆட்டத்தை காண்பித்ததால், தற்போது சிறந்த T20 பேட்ஸ்மேன் பட்டியலில் 12-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவரின் சிறந்த தரநிலையாகும். பிரேவிஸின் இந்த ஃபார்ம் CSK ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அபிஷேக் சர்மா, திலக் வர்மா முதலிரண்டு இடங்களில் தொடர்கின்றனர்.