News March 18, 2024
திருச்சியில் அதிகாரிகளிடம் சிக்கிய பணம்.!

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இன்று(மார்ச்.18) காலை திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 21, 2025
திருச்சி: கொட்டிக் கிடக்கும் அரசு வேலை

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 27.11.2025
4. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 21, 2025
திருச்சி: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு!

திருச்சி மக்களே, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் ‘9444123456’ என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 21, 2025
திருச்சி: இலவச ஆங்கில மொழி பயிற்சி

தாட்கோ மூலம் 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு, சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை (IELTS) தேர்விற்கான இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் சேர்வதற்கு www.tahdco.com என்ற தளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி ராஜா காலனி பகுதியில் உள்ள தாட்கோ அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431- 2463969 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


