News March 20, 2025
பாட்டில்ல பால் கொடுக்க வேணாம் மம்மி

குழந்தைகளுக்கு வழக்கமாக தாய்மார்கள் பாட்டில்ல பால் கொடுக்குறது தான் வழக்கம். ஆனா குழந்தை பிறந்து 6 மாசம் ஆச்சுனா அத நிறுத்திடனும்னு சொல்றாங்க டாக்டர்ஸ். ஏன்னா, பாட்டில்ல பாலை குடிக்க குழந்தைகள் நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதால் சர்க்கரை பற்களில் ஒட்டி பாக்டீரியா ஏற்படுமாம். அதனால் கப்பில் உணவை கொடுப்பதே சிறந்ததாம். குழந்தைகளின் ஈறுகளை சுத்தம் செய்வதோடு, சீரான உணவுப் பழக்கத்தை பழக்குவது அவசியம்.
Similar News
News March 21, 2025
FactCheck : கோயில் அறங்காவலராக இஸ்லாமியரா?

தஞ்சை பெருமாள் கோயில் அறங்காவலராக இஸ்லாமியரை அறநிலைத்துறை நியமித்ததாக எச்.ராஜா குற்றம் சாட்டியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியது. இந்நிலையில் பெருமாள் கோயில் அறங்காவலராக தேர்வான நர்க்கீஸ்கான் இஸ்லாமியர் இல்லை. மிகச் சிக்கலான பிரசவத்தில் பிறந்ததால், பிரசவம் பார்த்த மருத்துவர் நர்க்கீஸ்கான் பெயரை, அவருக்கு பெற்றோர் வைத்துள்ளனர் என்று TNFactCheck தெரிவித்துள்ளது.
News March 21, 2025
10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் நாளை (மார்ச் 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், 2 – 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
News March 21, 2025
25 நாட்களில் முழு நேர அரசியலில் விஜய்

தவெக தலைவர் விஜய் இன்னும் 25 நாட்களில் தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு 25 நாட்களில் நிறைவடைய உள்ளதாகக் கூறப்படுகிறது. அதை முடித்த கையோடு பூத் கமிட்டி மாநாடு, சுற்றுப்பயணம், பொதுக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர். 2026 சட்டசபை தேர்தலே தங்கள் இலக்கு என விஜய் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.