News September 7, 2025
ஞானவேல் இயக்கத்தில் மோகன்லால்?

நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள ‘Dosa king’ படத்தின் கதையை மோகன்லாலிடம் சொல்லியுள்ளாராம் டி.ஜே.ஞானவேல். இது மோகன்லாலுக்கும் பிடித்துபோக, படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை வழக்கில் சரவண பவன் நிறுவனர் ராஜகோபாலுக்கு கிடைத்த ஆயுள் தண்டனையை வைத்தே இப்படம் உருவாகவுள்ளது. இறுதியாக ஞானவேல் இயக்கிய ‘வேட்டையன்’ படம் தோல்வியையேச் சந்தித்தது.
Similar News
News September 7, 2025
FLASH: செங்கோட்டையனை சந்திக்கும் ஓபிஎஸ்

அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என OPS உறுதியளித்துள்ளார். பெரியகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், செங்கோட்டையன் கூறிய 10 நாள்கள் கெடு முடிந்தவுடன் அவரை நேரில் சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவித்தார். கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட பிறகு, EPS-க்கு எதிரணியிலுள்ள பலரும் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
News September 7, 2025
BREAKING: தங்கம் யூனிட் ₹5,493 உயர்ந்தது

தங்க பத்திர திட்டத்தில் ஒரு யூனிட்டிற்கு ₹10,610 வழங்கப்படும் என RBI அறிவித்துள்ளது. 2020 – 2021 நிதியாண்டில் வெளியிடப்பட்ட தங்க பத்திர கணக்குக்கு முன்னதாகவே முதிர்வு தொகை வழங்கப்படுகிறது. 2020-ல் வெளியிடப்பட்ட விலையோடு(₹5,117) ஒப்பிடுகையில் 107.35%(₹5,493) லாபமாகும். கடந்த 3, 4, 5-ம் தேதிகளில், 24 காரட் தங்கத்தின் சராசரி விலையை கொண்டு, யூனிட் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக RBI தெரிவித்துள்ளது.
News September 7, 2025
உங்கள் உடல் உறுப்புகளுக்கு எதை பார்த்தால் பயம்?

நீங்கள் அன்றாடம் செய்யும் சில தவறுகளால் உங்கள் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. இதன் பக்கவிளைவுகள் உடனடியாக காட்டாது என்பதால் நாம் ஆரோக்கியமாக இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், 35 வயதுக்கு மேல் உங்களுக்கு அனைத்து உடல்நல பிரச்னைகளும் வரும். இதனை இப்போதே தடுக்க, உங்கள் உடல் உறுப்புகளை பாதிக்கும் விஷயங்கள் எவை என்பதை தெரிந்துகொண்டு அதை தவிர்த்துவிடுங்கள். SHARE.