News March 30, 2025
வருத்தம் தெரிவித்தார் மோகன் லால்

எம்புரான் திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சையான காட்சி குறித்து நடிகர் மோகன்லால் வருத்தம் தெரிவித்துள்ளார். குஜராத் கலவரம் பற்றிய காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றதாகக் கூறி, வலது சாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இருப்பினும், பகையை விதைக்கும் எண்ணம் இல்லையென மோகன்லால் பேஸ்புக் பதிவு செய்திருக்கிறார்.
Similar News
News April 1, 2025
மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பிப்பதில் குழப்பம்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் விடுபட்ட தகுதியுடையவர்களுக்கு 3 மாதத்திற்குள் உதவித் தொகை அளிக்கப்படும் என அமைச்சர்கள் அறிவித்து வருகின்றனர். ஆனால் இதற்கு யார்-யார் விண்ணப்பிப்பது? ரேஷன் கடையில் விண்ணப்பிப்பதா? இ-சேவை மையத்திலா? என அறிவிப்பு இல்லை. இதனால் பெண்கள் குழப்பத்தில் உள்ளனர்.
News April 1, 2025
900 மருந்துகளின் விலை உயருகிறது!

நீரிழிவு நோய், இதய நோய்கள் உள்ளிட்ட சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படும் 900 மருந்துகளின் விலை 1.74% இன்று முதல் உயருகிறது. ரசாயனங்கள், உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள NPPA அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மருந்துகள் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டும் மருந்துகள் விலை உயருகிறது. Ex. வைரஸ் தடுப்பு மருந்தான Acyclovir 200mg 1 மாத்திரைக்கு ₹7.74, 400mg 1 மாத்திரைக்கு ₹13.90 உயருமாம்.
News April 1, 2025
மாமியாருக்கு கண்ணீர் அஞ்சலி… மருமகன் கைது!

திருப்பத்தூர் அருகே உயிரோடு இருக்கும் மாமியாருக்கு இரங்கல் போஸ்டர் டிசைன் செய்து மனைவி, உறவினர்களுக்கு அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெங்கடேசனுடன் சண்டையிட்டு, அவரது மனைவி தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால், மனைவிக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துவரும் அவர், தற்போது இந்த வேலையை பார்த்துள்ளார். மனைவி அளித்த புகாரில் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார். இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்.