News April 4, 2025
மோடியின் இலங்கை பயணம்.. 11 மீனவர்கள் விடுதலை

தமிழக மீனவர்கள் 11 பேரை நிபந்தனையின்றி இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுவித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி கடந்த 27ஆம் தேதி இலங்கை கடற்படையினர் இவர்களை கைது செய்தனர். பிரதமர் மோடி தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்கு செல்லவுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News April 11, 2025
நாள் முழுவதும் நிர்வாணமாக நடமாடிய பாப் பாடகி

அவ்வப்போது ஏதாவது ஒரு அதிரடியில் ஈடுபட்டு வைரலாவது, பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் வழக்கம். இம்முறை அவர் செய்துள்ளது சோஷியல் மீடியாவில் புயலைக் கிளப்பியுள்ளது. ஒருநாள் முழுவதும் கடற்கரை ஒன்றில் நிர்வாணமாக இருந்ததாகவும், வெயிலின் கடுமையால் தன் சருமம் பாதிக்கப்பட்டதாகவும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் பிரிட்னி. தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டதாக கடந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரிட்னி.
News April 11, 2025
என்னது.. தாஜ்மஹால் இவரது குடும்ப சொத்தா?

தாஜ்மஹால் தனது குடும்ப சொத்து என ஹைதராபாத்தைச் சேர்ந்த யாகூப் ஹபீபுதீன் தெரிவித்து வருகிறார். தன்னை முகலாய இளவரசர் எனக் கூறிக்கொள்ளும் அவர், இந்தியாவின் கடைசி முகலாய பேரரசரான பகதூர் ஷா ஜாஃபரின் 6ஆவது தலைமுறை வாரிசு என கூறுகிறார். இதை நிரூபிக்க, ஹைதராபாத் கோர்ட்டில் தன்னுடைய DNA ரிப்போர்ட்டையும் அவர் சமர்பித்துள்ளார். மேலும், பாபர் மசூதி இருந்த இடம் தனக்கு சொந்தமானது எனவும் கூறிவருகிறார்.
News April 11, 2025
டிகிரி போதும்.. இந்திய அரசில் ₹1,40,000 சம்பளத்தில் வேலை!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் 309 ஜூனியர் Air traffic control பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 27 வயதிற்கு உட்பட்ட இளங்கலை டிகிரி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கணினி வழி தேர்வு நடைபெறும். மாதம் குறைந்தபட்சம் ₹40,000 – ₹1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் ஏப்ரல் 25 தொடங்கி, மே 25 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, <