News August 11, 2025
மோடி வருகை திமுகவுக்கே சாதகம்: KN நேரு

திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு இருப்பதாக EPS பகல் கனவு கண்டு கொண்டிருப்பதாக KN நேரு தெரிவித்துள்ளார். ஆனால், அதிமுக கூட்டணியில் பிரச்சனை உள்ளதால்தான் OPS வெளியேறி உள்ளதாகவும் விமர்சித்துள்ளார். லோக்சபா தேர்தலுக்கு முன் 40முறை மோடி தமிழகம் வந்த நிலையில் திமுக அபார வெற்றி பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். அதனால் மோடி அடிக்கடி தமிழகம் வந்தால் திமுக கூட்டணி 2026-ல் அமோகமாக வெற்றி என்றும் கூறியுள்ளார்.
Similar News
News August 11, 2025
இன்று ஒரே நாளில் இந்தியா, பாக்., போர் ஒத்திகை

பஹல்காம் தாக்குதலால் பாக்.,- இந்தியா இடையே போர் பதற்றம் தொற்றியது. பாக்., பின்வாங்கியதால் தாக்குதல் கைவிடப்பட்டது. தற்போது அமெரிக்கா சென்றுள்ள பாக்., ராணுவ தளபதி அசிம் முனிர், இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்நிலையில், அரபிக் கடலில் இந்திய கடற்படை இன்று போர் ஒத்திகையில் ஈடுபடுவதாக அறிவித்தது. இதனால் பதறிப்போன பாக்.,கும் இன்றே போர் ஒத்திகையில் ஈடுபடபோவதாக கூறியுள்ளது.
News August 11, 2025
இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான்

இந்தியாவுடனான மோதலுக்கு பின் 2-வது முறையாக பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் அமெரிக்கா சென்றுள்ளார். இதனிடையே, இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் அணு ஆயுதத்தை வைத்து பாதி உலகையே அழித்து விடுவோம் என அசிம் முனிர் எச்சரித்துள்ளார். சிந்து நதியில் இந்தியா அணை கட்டும் வரை காத்திருப்போம் என கூறிய அவர் கட்டிய பின் ஏவுகணைகளால் அதை அழித்துவிடுவோம் என தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
BREAKING: தங்கம் விலை ₹560 குறைந்தது

கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று தலைகீழாக குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 குறைந்து ₹75,000-க்கும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹9,375-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராமுக்கு ₹127-க்கும், கிலோ வெள்ளி ₹-1,27,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.