News April 24, 2024
இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக மோடி பேச்சு

முத்தலாக் தடைச் சட்டம் மூலம் இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கை பாதுகாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உ.பி., அலிகாரில் பேசிய அவர், இஸ்லாமிய மக்களுக்காக பல்வேறு உதவிகளை பாஜக செய்து வருகிறது. ஹஜ் பயணத்திற்கான நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குவதாக தெரிவித்தார். முன்னதாக, நேற்று இஸ்லாமியர்கள் தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்த அவர், இன்று அதற்கு நேர் எதிராக பேசியுள்ளார்.
Similar News
News January 6, 2026
புதுவை: தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் மோசடி

நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை செல்போன் மூலம் பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசி, கிரெடிட் கார்டு உச்ச வரம்பை உயர்த்தி தருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு தனியார் நிறுவன ஊழியர் சம்மதம் தெரிவித்து, அந்த பெண் கேட்ட தகவல்களை பகிர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.25 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 6, 2026
உலகில் அதிகம் திருடப்படும் பொருள் எது தெரியுமா?

திருட்டு என்றாலே பலருக்கும் பணம், நகை என்றுதான் நம் நினைவுக்கு வரும். ஆனால் உண்மையில் அதிகம் திருடப்பட்ட பொருள் என்ன என்பது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆம், உலகில் அதிகம் திருடப்படும் பொருள் என்றால் பாலாடைக்கட்டி என்ற சீஸ் தான் என ஆய்வுகள் கூறுகின்றன. அதிக விலை, அதிக சுவை மற்றும் எளிதில் மறைக்க கூடியது என்பதால் உலகம் முழுவதும் அவை எளிதில் திருடப்படும் பொருளாக உள்ளது.
News January 6, 2026
சின்மயியை நீக்கிய மோகன் ஜி

திரெளபதி 2 படத்தில் ’எம்கோனே’ பாடலை பாடிய சின்மயிக்கு பதிலாக வேறு பாடகியை பாட வைக்க உள்ளதாக மோகன் ஜி தெரிவித்துள்ளார். முன்னதாக, எம்கோனே பாடலை பாடியதற்காக <<18438965>>மன்னிப்பு<<>> கேட்டுக்கொள்கிறேன். மோகன் ஜி படம் என தெரிந்திருந்தால் பாடியிருக்கவே மாட்டேன் என X-ல் சின்மயி பதிவிட்டது சர்ச்சையானது. அவரது கருத்துக்கு அப்போதே வருத்தம் தெரிவித்த நிலையில், தற்போது சின்மயியின் குரலை நீக்குவதாக இயக்குநர் கூறியுள்ளார்.


