News June 5, 2024
மோடி ராஜினாமா ஏற்பு

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றிபெற்றதை அடுத்து, மீண்டும் பிரதமராக பதவியேற்கும் வகையில் தனது பதவி மற்றும் அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் முர்முவிடம் மோடி வழங்கினார். இதையடுத்து, அவரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது. மேலும், புதிய அரசு அமையும் வரை மோடி காபந்து பிரதமராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 13, 2025
வெளிநாட்டு படங்கள் பார்த்தால் மரண தண்டனை

வடகொரியாவில் வெளிநாட்டு படங்களை பார்ப்பவர்களுக்கும், அதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யும் நபர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. உலகில் எங்கும் இல்லாத வகையில், வடகொரியாவில் மக்கள் அதீதமாக கண்காணிக்கப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக இது அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அந்நாட்டில் இருந்து தப்பிய 300 பேர் கூறியதின் அடிப்படையில் ஐநா இதை கூறியுள்ளது.
News September 13, 2025
உலகில் இண்டர்நெட், ATM இல்லாத ஒரே நாடு

ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் 99% மக்கள் இண்டர்நெட்டையோ, சமூக வலைதளங்களையோ பயன்படுத்துவதில்லை. இங்கு இண்டர்நெட் ஸ்பீடு மிகமிக குறைவு. ஒரு சில இடங்களில் கஃபேக்களில் WIFI இருந்தாலும், அதன் வேகமும் மிக குறைவு தான். இந்நாட்டில் 1 மணி நேரம் இண்டர்நெட் பயன்படுத்த, இந்திய மதிப்பில் ₹100 செலவிட வேண்டும் என்பதால், மக்கள் அதை புறக்கணிக்கின்றனர். அதேபோல், இந்த நாட்டில் ATM வசதிகளும் இல்லை.
News September 13, 2025
கூச்சல், கும்மாளம்: விஜய்யை அட்டாக் செய்த CM ஸ்டாலின்

விஜய்யின் சுற்றுப்பயணத்தில் திருச்சியே திண்டாடிபோயுள்ளது. இந்நிலையில், கொள்கையில்லா கூட்டத்தைச் சேர்த்து, கும்மாளம் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் திமுக அல்ல என CM ஸ்டாலின் விஜய்யை சாடியுள்ளார். திமுக முப்பெரும் விழாவுக்காக தொண்டர்களுக்கு அழைப்பு மடல் எழுதிய அவர், பழைய எதிரிகள்-புதிய எதிரிகள் என எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டு பார்க்கமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.