News April 11, 2024
மோடியின் ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத மோடியின் ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்று கனிமொழி கூறியுள்ளார். கோவில்பட்டியில் மக்களிடம் வாக்கு சேகரித்த அவர், தேர்தல் பத்திரம் என்ற பெயரில் சட்டப்பூர்வமாக ஊழல் செய்த கட்சி பாஜக. பெரிய நிறுவனங்களில் ரெய்டு நடத்தி, அவர்களிடம் தேர்தல் பத்திரம் மூலம் மிரட்டி பணம் வாங்கியுள்ளது. அரசியல் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது எனக் கூறினார்.
Similar News
News January 22, 2026
EPS வீட்டில் பியூஷ் கோயலுக்கு விருந்து

நாளை PM மோடி தமிழகம் வர உள்ள நிலையில், அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை EPS வீட்டில் பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுக்கு விருந்தளிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்சியாக தொகுதி பங்கீடு குறித்து இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. நீண்ட நாள்களாக இழுபறியில் உள்ள தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 22, 2026
நடிகர் கமல் ராய் காலமானார்.. குவியும் அஞ்சலி

நடிகை ஊர்வசியின் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது. உயிர்துணையாக இருந்த அவரது சகோதரர் கமல் ராய் (54) மாரடைப்பால் காலமானார். ‘புதுசா படிக்கிறேன் பாட்டு’ என்ற தமிழ் படம் மூலம் நடிப்பு பயணத்தை தொடங்கிய அவர் மலையாளத்தில் ‘தி கிங் மேக்கர்’, ‘லீடர்’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்றார். இவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள இயக்குநர் வினயன், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
வைத்திலிங்கம் திமுகவிற்கு வந்தது ஏன்? திருச்சி சிவா

வைத்திலிங்கம் திமுகவிற்கு வந்ததை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என திருச்சி சிவா கூறியுள்ளார். மேலும், CM ஸ்டாலின் மீதும், அவரது ஆட்சித்திறன், செயல்பாடு மீதும் நம்பிக்கை வைத்து திமுகவை நாடி வைத்திலிங்கம் வந்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசுகையில், எங்கள் உறவு மிக சிறப்பாக இருக்கிறது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் எனவும் அவர் பேசியுள்ளார்.


