News November 23, 2024
இத்தாலி பிரதமருக்கு மோடி வழங்கிய பரிசு!

நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்குச் சென்ற பிரதமர் மோடி, பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். குறிப்பாக ஜி20 மாநாட்டில் இத்தாலி பிரதமர் மெலோனிக்கு வெள்ளி மெழுகுவர்த்தியை வழங்கினார். இந்தியாவின் கலாசாரத்தை உலக அரங்கில் பறைசாற்றும் விதமாக ஜம்மு-காஷ்மீர், ஆந்திரா, ஜார்க்கண்ட், கர்நாடகா, தமிழ்நாடு, உ.பி., லடாக், ஒடிஷா மாநிலங்களில் இருந்து கைவினைப் பொருட்களை PM எடுத்துச் சென்றார்.
Similar News
News December 6, 2025
பாதுகாப்பு வளையத்தில் சேலம் மாவட்டம்!

இன்று (டிச. 6) பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, சேலம் மாநகரம் முழுவதும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.இந்தநிலையில் நேற்று சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் சேலத்தில் உள்ள தனியார் விடுதிகள் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் தங்கியிருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் சோதனை!
News December 6, 2025
ஜீரண சக்தியை அதிகரிக்கும் மூலிகை தேநீர்!

உடலின் ரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்தவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும் சீமை சாமந்தி தேநீர் உதவும். ➤சாமந்திப்பூ இதழ்களை பிரித்து நன்கு காய வைக்கவும். ➤1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 1 தேக்கரண்டி உலர்ந்த பூக்களை போடவும். ➤8- 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். ➤அதை அடுப்பிலிருந்து இறக்கி, அதில் கொஞ்சம் தேன் கலந்து கொண்டால், சத்தான சீமை சாமந்தி தேநீர் ரெடி. SHARE THIS.
News December 6, 2025
சற்றுமுன்: மழை வெளுத்து வாங்கும்

டிட்வா புயல் எதிரொலியால், தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கனமழை வெளுத்து வாங்கியது. பின், புயல் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்ததால், நேற்று சற்று மழை குறைந்தது. இந்நிலையில், கோவை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தேனி, நீலகிரி, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ( காலை 10 மணி வரை) மழை பெய்யக்கூடும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது.


