News October 20, 2025
மோடியின் தீபாவளி கிளிக்ஸ்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INS விக்ராந்த் போர்க்கப்பலில், PM மோடி தீபாவளியை கொண்டாடினார். கப்பற்படை வீரர்களுக்கு மத்தியில் பேசிய அவர், நக்சல் பயங்கரவாதத்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது என்றார். நக்சல் பயங்கரவாதத்தை மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வரும் என்றும் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், போர் வீரர்களுடன் PM மோடி கொண்டாடிய தீபாவளி போட்டோஸை swipe செய்து பாருங்கள்.
Similar News
News October 20, 2025
PM மோடி பங்கேற்ற ’Bara Khana’ விருந்து பற்றி தெரியுமா?

தீபாவளியையொட்டி கப்பற்படை வீரர்களுடன் கிராண்டான விருந்தில் பங்கேற்றார் PM மோடி. INS விக்ராந்தில் ஆண்டுக்கு ஒரு முறை கப்பற்படை வீரர்கள் அனைவரும் சரிசமமாக அமர்ந்து ‘Bara Khana’ என்ற விருந்தில் பங்கேற்கின்றனர். சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் இந்நிகழ்ச்சியில், கப்பற்படையின் சாதனைகள் பற்றியும் பேசப்படுகிறது. இதில் பங்கேற்ற PM மோடி, தன்னுடன் துணிச்சலான கப்பற்படை வீரர்கள் உள்ளதாக புகழ்ந்தார்.
News October 20, 2025
தமிழகத்தில் வியப்பூட்டும் விநோத நேர்த்திக்கடன்கள்

தீபாவளி, பொங்கல் என உலகமே கொண்டாடும் பண்டிகைகளை நாம் கொண்டாடும் அதேவேளையில், உள்ளூர் கோயில் திருவிழாக்களையும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறோம். இந்த திருவிழாக்களில் நாம் நினைத்தது நிறைவேறினாலோ (அ) நிறைவேறவோ வேண்டி நேர்த்திக்கடன்களை செலுத்துகிறோம். இவ்வாறு வித்தியாசமான முறையில் செலுத்தும் நேர்த்திக்கடன்களை மேலே swipe செய்து பாருங்கள். உங்களுக்கு தெரிந்த விநோத வழிபாடுகளை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News October 20, 2025
‘நான் சாகப்போறேன்.. என் சாவுக்கு இவர்தான் காரணம்’

பெங்களூருவில் ஓலா நிறுவன ஊழியர் அரவிந்த், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் 28 பக்க தற்கொலை கடிதத்தில், ஓலா நிறுவன CEO பவிஷ் அகர்வால், மற்றுமொரு உயரதிகாரி இருவரும் தன்னை டார்ச்சர் செய்ததாலும், சம்பளத்தை இழுத்தடித்ததாலும் தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து CEO பவிஷ் மீது FIR போடப்பட்டுள்ளது. அலுவலக டார்ச்சர் இந்த அளவுக்கு இருக்குமா?