News August 6, 2025
மோடியின் சீனப் பயணம்… அமெரிக்காவுக்கு செக்!

கால்வான் மோதல், பஹல்காம் தாக்குதலின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு போன்ற காரணங்களால் சீனாவை இந்தியா தள்ளியே வைத்திருந்தது. இந்நிலையில், மோடியின் <<17321874>>சீனப் பயணம்<<>> ராஜதந்திர நகர்வாக பார்க்கப்படுகிறது. டிரம்பின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டால், பாதிப்பை சமாளிக்க நமக்கு புதிய பொருளாதார உறவுகள் தேவை. மேலும், அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்கொள்ள ரஷ்ய, சீன நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா திட்டமிடுகிறது.
Similar News
News August 7, 2025
50% வரி… எப்போது அமலுக்கு வரும்?

மிரட்டலுக்கு பணியாததால், இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீதான வரியை 50% ஆக அதிபர் டிரம்ப் உயர்த்தியுள்ளார். அண்மையில் விதிக்கப்பட்ட 25% வரி உயர்வு நாளை முதல் அமலாகும் என்றும், இன்று அறிவிக்கப்பட்ட கூடுதல் 25%, அடுத்த 21 நாள்களுக்குள் அமலுக்கு வருமெனவும் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் சீனாவுக்கு (51%) அடுத்து இந்தியா மீதுதான் அமெரிக்கா அதிக வரிவிதித்துள்ளது.
News August 7, 2025
ஸ்டாலின் ஆட்சிக்கு 50 மார்க்.. பிரேமலதா திடீர் திருப்பம்

ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நிறையும், குறையும் கலந்த ஆட்சி, அதற்கு 50 மார்க் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக இன்னும் அறிவிக்கவில்லை. ஆனாலும், திமுகவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. கடந்த காலங்களில் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த பிரேமலதா, தற்போது மென்மையான போக்குடன் கையாள்வது கூட்டணிக்கே என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News August 7, 2025
T20 கிரிக்கெட்டில் புதிய சாதனை

ஆப்கன் வீரர் ரஷீத் கான் T20 கிரிக்கெட்டில் 650 விக்கெட்கள் வீழ்த்தி அரிய சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் லீக் தொடரின் முதல் ஆட்டத்தில் இச்சாதனையை அவர் நிகழ்த்தினார். ஓவல் அணிக்காக விளையாடும் ரஷீத், லண்டன் ஸ்பிரிட்ஸ் அணிக்கு எதிராக 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து அவர் கைப்பற்றிய மொத்த விக்கெட்களின் எண்ணிக்கை 651 ஆக உயர்ந்தது. Congrats Rashid!