News July 24, 2024
கூட்டணி கட்சிகளுக்காக உழைக்கும் மோடி: மாறன்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன், “தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து உழைத்து வருகிறார். ஆனால், பிரதமர் மோடி, தனக்கு வாக்களித்தவர்களைப் பற்றி கூட சிந்திக்காமல், கூட்டணி கட்சிகளுக்காக மட்டுமே உழைக்கிறார். சென்னை மெட்ரோ 2ஆம் கட்டத்திற்காக மத்திய அரசு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை.” என்று சாடினார்.
Similar News
News March 3, 2026
சங்கீதாவுக்கு இதை செய்யவில்லை.. விஜய் REWIND

விஜய் – சங்கீதா விவகாரம் பேசுபொருளான நிலையில், NDTV-க்கு அளித்த பழைய பேட்டியில் விஜய் பேசியது வைரலாகிறது. அதில், திருமணத்திற்கு முன்பு தனக்கு நிறைய பரிசுகளை சங்கீதா கொடுப்பார். ஆனால், திருமணத்திற்கு பிறகு அவை குறையத் தொடங்கின. காரணம், நான் அவர் கொடுக்கும் பரிசுகளுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை என விஜய் கூறியுள்ளார். தன்னை அதிகளவில் புரிந்துகொண்டு நடப்பவர் சங்கீதா என்றும் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
கூட்டணியை இறுதி செய்ய காங்கிரஸ் தீவிரம்..

கூட்டணியை உறுதி செய்ய காங்கிரஸ் கட்சியினர் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபுறம், ஸ்டாலினை சிதம்பரம் சந்திக்க இருக்கும் நிலையில், மறுபுறம் கார்கே, சோனியா காந்தி, ராகுல், கே.சி.வேணுகோபால் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக 11 மணி முதல் ஆலோசனை செய்து வருகின்றனர். குறிப்பாக, தமிழக தேர்தல், திமுக கூட்டணியில் இருந்து விலகினால் ஏற்படும் சாதகம், பாதகம் குறித்து தீவிரமாக ஆலோசிக்கின்றனர்.
News March 3, 2026
GALLERY: ரெஸ்ட்டில் இவ்ளோ வகைகளா?

ரெஸ்ட் எடுக்கணும் என்றால், சரி கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றுதானே யோசிப்போம். ஆனால், மனிதர்களுக்கு பல்வேறு வகையான ரெஸ்ட் தேவை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், மனித உடலையும், மூளையும் மீண்டும் ‘Reset’ பண்ணி, உற்சாகமாக உழைக்க, 6 வகையான ரெஸ்ட்களை எடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அவற்றை என்னென்ன என அறிய, போட்டோவை Swipe பண்ணுங்க. உங்களுக்கு எந்த விதமான ரெஸ்ட் தேவைப்படுது?


