News April 27, 2024
மீண்டும் பிரதமரானால் பழிவாங்குவார் மோடி

மோடி மீண்டும் பிரதமரானால் விவசாயிகளை பழிவாங்குவார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், விவசாயிகள் போராட்டத்தால் 2021இல் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ததென்றும், மோடி மன்னிப்பு கேட்டார் என்றும் கூறினார். மோடி, கருநிற கோப்ரா போன்றவர், மீண்டும் பிரதமரானால், விவசாயிகளை பழிவாங்காமல் விட மாட்டார் என்றும் அவர் எச்சரித்தார்.
Similar News
News January 24, 2026
₹2,000 உதவித்தொகை.. CM ஸ்டாலின் புதிய அறிவிப்பு

முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை நீட்டிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் தற்போது 33 லட்சம் பேர் பயன்பெற்று வரும் நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பித்த மேலும் 1.8 லட்சம் பேருக்கு வரும் 4-ம் தேதி முதல் உதவித்தொகை வழங்கும் பணிகள் தொடங்க உள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள் மாதம் ₹2,000 வரை உதவித்தொகை பெறுகின்றனர்.
News January 24, 2026
பகுதிநேர டீச்சர்களுக்கு சிறப்பு மதிப்பெண்: CM ஸ்டாலின்

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்போது பகுதிநேர ஆசிரியர்களின் பணிக் காலத்தை அடிப்படையாக கொண்டு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ₹15,000, மே மாதம் கோடை விடுமுறையின்போது ₹10,000 ஊதியம் வழங்கப்படும் என அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார். ஆனாலும், பணி நிரந்தர வாக்குறுதியை நிறைவேற்ற கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
News January 24, 2026
FLASH: சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு

கடந்த 20-ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 5 நாள்கள் நடைபெற்ற கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், மத்திய அரசின் VB–G RAM G மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏப்ரலில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் பிப். இறுதி (அ) மார்ச் முதல் வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கலாக வாய்ப்புள்ளது.


