News April 9, 2024
சென்னை வரும் மோடி இதற்கு பதிலளிக்க வேண்டும்

பாஜக வேட்பாளரின் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து சென்னைக்கு வரும் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளை ஊழல் கட்சிகள் என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், உண்மையான ஊழல் கட்சியே பாஜகதான் என்றார். மேலும், தேர்தல் ஆணையம் கட்சி பாகுபாடு இல்லாமல் செயல்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 4, 2026
31 மாவட்டங்களில் இரவில் மழை வெளுக்கும்: IMD

தமிழகத்தில் 10 மணிவரை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது.
அதன்படி கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடுமாம். .
News April 4, 2026
ரேஷன் கார்டுக்கு ₹10,000.. சற்றுமுன் அறிவித்தார்

திமுக ஆட்சியில் மின் கண்டனம், வீட்டு வரி உள்ளிட்டவை பல மடங்கு உயர்த்தப்பட்டதாக EPS விமர்சித்துள்ளார். ஆரணியில் பிரசாரம் செய்த அவர், திமுக ஆட்சியால் சிரமத்தில் உள்ள மக்களுக்கு, அதிமுக ஆட்சி அமைந்தால் வங்கி கணக்கில் 10,000 செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் பயிர் கடன் தள்ளுபடி, படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் ₹2,000 வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தார்.
News April 4, 2026
காட்டுமன்னார்கோவிலுக்கு புதிய வேட்பாளர் அறிவிப்பு

காட்டுமன்னார்கோவிலில் விசிக சார்பில் மறைந்த தலைவர் இளைய பெருமாளின் மகன் ஜோதிமணி போட்டியிடுவார் என திருமாவளவன் அறிவித்துள்ளார். முன்னதாக காட்டுமன்னார்கோவிலில் தானே போட்டியிடுவதாக அறிவித்த அவர், கடைசி நேரத்தில் <<19567489>>விலகல் முடிவை<<>> எடுத்துள்ளார். மேலும் தன்னை யாராலும் இயக்க முடியாது என கூறிய அவர், யுத்த களத்தில் பின்வாங்குவது ராஜதந்திரம் தான் எனவும் குறிப்பிட்டார்.


