News March 26, 2025
எப்போது தேர்தல் நடந்தாலும் மோடியே பிரதமர்: ஓபிஎஸ்

இந்திய நாட்டின் புகழை பிரதமர் மோடி உலக அளவில் கொண்டு சென்றுள்ளதாக ஓபிஎஸ் பாராட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது ஆட்சி திறன் காரணமாக இந்தியாவை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பிரதமர் மோடி எடுத்து சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எத்தனை முறை தேர்தல் வந்தாலும், பிரதமராக மோடியே வருவார் என்றும் தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
Similar News
News March 27, 2025
வீர தீர சூரன் வழக்கு: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

B4U நிறுவனம் தொடர்ந்த வழக்கில் வீர தீர சூரன் படம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதில், B4U நிறுவனத்திற்கு படத்தை தயாரித்த HR pictures ₹7 கோடி டெபாசிட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்தம் குறித்த அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்கவும் கெடு விதித்துள்ளது. படம் எப்போது வெளிவரும் என்ற தகவல் இல்லை.
News March 27, 2025
25% கூடுதல் வரி: பாதிக்கப்படும் இந்திய நிறுவனங்கள்

இறக்குமதி வாகனங்களுக்கு 25% வரை கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருப்பது, இந்தியாவையும் பாதிக்கும். அமெரிக்க சந்தையில் வலுவான தடத்தை பதித்திருக்கும் டாடா மோட்டார்ஸின் ஜாகுவார் லேண்ட் ரோவர், 650 சிசியை களமிறக்கும் ராயல் என்ஃபீல்டு, ஐஷர் மோட்டார்ஸ் ஆகிய இந்திய நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.
News March 27, 2025
அதிமுகவில் ஓபிஎஸ்ஸை இணைக்க முடியாது: இபிஎஸ்

அதிமுகவில் ஓபிஎஸ்ஸை இணைக்க முடியாது என இபிஎஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதிமுகவினர் கோயிலாக கருதும் கட்சியின் தலைமை அலுவலகத்தை ரவுடிகளை வைத்து ஓபிஎஸ் தாக்கியதாக குற்றம்சாட்டிய அவர், அதிமுகவில் இருக்கவே தகுதியற்றவர் என விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தலைவிரித்தாடுவதாகக் கடுமையாகச் சாடினார்.