News May 22, 2024
2024இல் மட்டுமல்ல, 2029லிலும் மோடிதான் பிரதமராவார்

மக்களவைத் தேர்தலில் பாஜக வென்றால், 2024இல் மட்டுமல்ல 2029ஆம் ஆண்டிலும் மோடிதான் பிரதமர் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்பு துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இதுவரை நடந்த 4 கட்ட தேர்தலிலேயே பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்து விட்டதாகவும், ஆதலால் இந்த முறை 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெல்வது உறுதி என்றும் கூறினார்.
Similar News
News November 21, 2025
வேலூர்: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள் – APPLY NOW!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டிக்கெட் மேற்பார்வையாளர்-161, ஸ்டேஷன் மாஸ்டர்-615, சரக்கு ரயில் மேலாளர்-3416, இளநிலை கணக்கு உதவியாளர்-921, முதுநிலை எழுத்தர்-638 போக்குவரத்து உதவியாளர்-59. டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.25,500-ரூ.35,400 வரை வழங்கப்படும். நவ.27ம் தேதிக்குள் இங்கு<
News November 21, 2025
ஆப்கன் எல்லையில் பாக்., தாக்குதல்: 23 பேர் பலி

PAK-AFG இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஆப்கன் எல்லைக்கு அருகே இரண்டு தனித்தனி தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ளது. குர்ரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட TTP குழுவை சேர்ந்தவர்கள் பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 23 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது.
News November 21, 2025
குளிர்காலத்தில் இத கண்டிப்பா சாப்பிடுங்க!

குளிர்காலத்தில் உடல் மந்தமாக இருக்கும். எனவே, ஆற்றலை அதிகரிக்க சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். அதில் முக்கியமான ஒன்று வேர்க்கடலை என்கின்றனர் டாக்டர்கள் *இதில், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. *குடலுக்கு நல்லது. *எலும்புகளை வலுப்படுத்துகிறது. *கொலஸ்ட்ரால், சுகர் அளவை கட்டுப்படுத்தும். *சரும பாதுகாப்பு, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.


