News August 4, 2024
2029 ஆண்டும் மோடியே பிரதமராவார்: அமித் ஷா

2029ஆம் ஆண்டும் பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்று பாஜக மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். சண்டிகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், மத்திய பாஜக கூட்டணி அரசு முழு காலமும் ஆட்சியில் நீடிக்காது என எதிர்க்கட்சிகள் கூறுவதாகவும், ஆனால் பாஜக கூட்டணி அரசு இந்த ஆட்சியை முழுமை செய்வதோடு மட்டுமல்லாமல் அடுத்தும் மத்தியில் ஆட்சியமைக்கும் என்றார்.
Similar News
News March 19, 2026
திமுக அமைச்சருக்கு அதிர்ச்சி

வரும் தேர்தலில் இளைஞர்களை அதிகளவில் தேர்தல் களத்தில் இறக்கிவிட திமுக தலைமை முடிவு எடுத்துள்ளதாம். அந்த வகையில் திருமயம் தொகுதியில் உதயநிதிக்கு மிக நெருக்கமான புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் கைலாசத்தை போட்டியிட வைக்க திமுக திட்டமிட்டுள்ளதாம். இதனால், இந்த தொகுதியில் கடந்த இரண்டு தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றிபெற்ற அமைச்சர் ரகுபதிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
News March 19, 2026
இழுபறிக்கு இப்படி ஒரு காரணமா?

புதிய தமிழகம் கட்சி மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைய இசைவு தெரிவித்துள்ளது. ஆனால், கிருஷ்ணசாமி வைத்த நிபந்தனைகளால் சற்று குழப்பம் அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாக தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு 4 சீட்டுகள் வேண்டும். தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான சந்தன பிரியாவுக்கு MLA சீட்டுக் கொடுக்கக் கூடாது என கூறியதால் EPS அப்செட்டில் உள்ளதாக சொன்னாராம்.
News March 19, 2026
காலை நடைபயிற்சியில் இத்தனை நன்மைகளா?

ஆரோக்கிய வாழ்வுக்கு வலுசேர்க்கும் எளிமையான உடற்பயிற்சியில் நடைபயிற்சி முக்கியமானது. அதில் எவ்வளவு நன்மைகள் உள்ளன என்று உங்களுக்கு தெரியுமா? *இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். *மூளை செயல்பாடுகளை தூண்டி, மனக்குழப்பங்களை நீக்கும். *ஊக்க மனநிலையை இயற்கையாக உயர்த்தும் எண்டோர்பின்களை வெளியிடும். *குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கும். *தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி, அதில் ஒழுங்குமுறையை கொண்டுவரும்.


