News November 22, 2024

உலக நாடுகளுக்கு வகுப்பெடுத்த மோடி

image

கயானா நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு வகுப்பெடுத்துள்ளார். இந்தியாவின் DNA-வில் ஜனநாயகம் இருப்பதாகவும், முதலில் ஜனநாயகம், முதலில் மனிதநேயம் என்பதே உலக நாடுகள் முன்னேறுவதற்கான ஒரே வழி எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உலகளவில் தற்போது மோதலுக்கான நேரமில்லை எனவும், மோதலுக்கான காரணிகளை கண்டறிந்து அகற்றுவதற்கான நேரம் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News August 19, 2025

உயிர் பயம் உள்ளது.. அஜித் மரணத்தில் அடுத்த அதிர்ச்சி

image

கோயில் காவலாளி அஜித் கொல்லப்பட்ட வழக்கில், அவரது தரப்பு வக்கீல் கார்த்திக் ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கோர்ட் உத்தரவிட்டும் போலீஸ் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என தெரிவித்த அவர், வழக்கை நடத்தக் கூடாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் தெரிவித்துள்ளார். அச்சுறுத்தும் நபர்கள் குறித்த விவரங்களை கார்த்திக் ராஜா தெரிவித்தால், மேலும் பல தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

News August 19, 2025

சுதர்சன் ரெட்டியை தேர்ந்தெடுத்தது ஏன்?

image

INDIA கூட்டணியின் து.ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சட்டத்துறையில் நல்ல அனுபவம் பெற்றவர். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான இவர், கட்சி சார்பற்றவர். இவர் எந்த தேர்தலிலும் இதுவரை பங்கேற்றதில்லை. இவரை வேட்பாளராக தேர்ந்தெடுத்த கார்கே, ஒரு சிறந்த மனிதரை, நன்கு சட்டம் அறிந்தவரை வேட்பாளராக அறிவித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

அன்புமணிக்கு தேதி குறித்த ராமதாஸ்; மீண்டும் நோட்டீஸ்

image

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்காத நிலையில், அவர் கட்சியில் இருந்து இன்று நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அன்புமணிக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு ஆக.31ம் தேதிக்குள் நேரிலோ அல்லது கடிதத்தின் வாயிலாகவோ அன்புமணி பதிலளிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!