News March 20, 2024
புதினுடன் மோடி தொலைபேசியில் பேச்சு

ரஷ்ய அதிபராக 5வது முறையாக தேர்வு செய்யப்பட்டதற்கு, புதினுக்கு தொலைபேசி மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதின் பதவியேற்றுள்ளார். இதையடுத்து, தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யப் போரை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டுமென்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் அவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 7, 2025
பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல்

கோவாவின், அர்போரா பகுதியில் ஏற்பட்ட <<18492944>>தீ விபத்தில்<<>> 23 பேர் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி திரெளபதி முர்மு மற்றும் PM மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து துயரத்தை அளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். PM மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
News December 7, 2025
BREAKING: அறிவித்தார் செங்கோட்டையன்

தவெகவில் இணைந்தபிறகு கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்த செங்கோட்டையன் தீவிரமாக பணியாற்றுகிறார். இந்நிலையில், தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில் டிச.16-ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்க இருப்பதாக செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும், அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த உடனே பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றார்.
News December 7, 2025
கெட்ட எண்ணத்தில் அப்படி சொல்லவில்லை: SA கோச்!

<<18401120>>இந்திய அணி<<>> வீரர்களை மண்டியிட வைக்க நினைத்தோம் என SA கோச் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில், கெட்ட எண்ணத்துடன் தான் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவை அதிக நேரம் விளையாட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு சொன்னதாக தெரிவித்த அவர், தான் வேறொரு வார்த்தையை பயன்படுத்தி இருக்க வேண்டும் என்றார். மேலும், பணிவுதான் SA டெஸ்ட் அணியின் அடித்தளம் எனவும் கூறினார்.


