News May 18, 2024
நான் சொல்வதைதான் மோடி பேசுகிறார்: ராகுல் காந்தி

தான் பேசுவதைத்தான் பிரதமர் மோடி கூட்டத்தில் திரும்ப பேசுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், தொழிலதிபர்களான அதானி, அம்பானி குறித்து தாம் பேசியதாகவும், இதையடுத்து மோடியும் அவர்களை பற்றி பேசியதாகவும் குறிப்பிட்டார். மோடி ஏதேனும் பேச வேண்டுமென நீங்கள் விரும்பினால், அதை தெரிவிக்கலாம், அதை கூட்டத்தில் தாம் கூறுவதாக ராகுல் தெரிவித்தார்.
Similar News
News March 8, 2026
5,000 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5,000 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ₹15,000 வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, தாய் மொழியில் பேச்சு திறன் அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 3-ம் தேதிக்குள் இந்த <
News March 8, 2026
பெண் போராட வேண்டியிராத உலகை படைப்போம்: கமல்

பெண்களுக்கு சம வாய்ப்புகளையும், சம அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கையில் ஒட்டுமொத்த சமுதாயமும் வெற்றி பெறுகிறது என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். மகளிர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த அவர், மகளிர் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டியிராத சமத்துவ உலகை படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும்,
ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சிறகுகளைப் பெறுவதை உறுதி செய்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 8, 2026
விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி..

‘ஆட்சியில் பங்கு’ என்ற அஸ்திரத்தை விஜய் வீசியதால், பல கட்சிகள் தவெகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டின. ஆனால் இதுவரை, எந்த கட்சியும் கூட்டணி வைக்க முன்வரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள விஜய், தவெகவை நெருங்கி வந்த கட்சிகளுடன் உரிய முறையில் பேசி கூட்டணியில் சேர்க்காமல் இப்படி நமக்கு இருந்த வாய்ப்புகள் அனைத்தையும் கோட்டை விட்டுவிட்டீர்களே என்று ஆதவ் மீது அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


