News April 29, 2024

பதவி ஆசையில் மோடி அவதூறுகளைப் பேசுகிறார்

image

மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் பிரதமர் மோடி நாட்டு மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்துவதாக சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மோடியின் பரப்புரை குறித்துத் தேர்தல் ஆணையம் வரை புகார் அளிக்கப்பட்டும் தனது வெறிபிடித்த பரப்புரையைப் பிரதமர் மாற்றிக் கொள்ளாதது கண்டனத்துக்குரியது என்ற அவர், இதற்கான பதிலடியைத் தேர்தல் முடிவில் மோடி நிச்சயம் அனுபவிப்பார் என்றும் கூறினார்.

Similar News

News January 26, 2026

குடியரசு தின கொண்டாட்டத்தில் இணைந்த கூகுள்

image

இந்திய நாட்டின் 77-வது குடியரசு தினத்தை ஒட்டி கூகுள், இஸ்ரோவின் சாதனைகளை கொண்ட சிறப்பு டூடுலை வெளியிட்டு குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. இந்த டூடுலில், செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் அறிவியல் மனப்பான்மை, தொழில்நுட்ப வலிமை, எதிர்கால லட்சியங்களை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.

News January 26, 2026

USA-வில் நுழைய முயன்ற 24,000 இந்தியர்கள் கைது

image

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதில் இந்தியர்களும் சளைத்தவர்கள் இல்லை. கடந்த ஆண்டில் மட்டும் இப்படி நுழைய முயன்ற 23,830 இந்தியர்கள் பிடிபட்டுள்ளனர். அதாவது 2025-ல் சராசரியாக 20 நிமிடங்களுக்கு ஒரு இந்தியர் அமெரிக்க அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். 2024-ல் இது 85,119 ஆக இருந்த நிலையில், டிரம்ப்பின் கடும் நடவடிக்கையால் குறைந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வேலைத் தேடி சென்றவர்கள் தான்.

News January 26, 2026

மதுரை வடக்கில் DMK-க்கு பதில் காங்., போட்டியிட வேண்டும்

image

திமுக இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது என மதுரை வடக்கு தொகுதி MLA தளபதி கூறியிருந்தார். அதற்கு பதிலடியாக, 2026-ல் மதுரை வடக்கு தொகுதியில் காங்., போட்டியிட கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன் என்று X-ல் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!