News May 1, 2024

பாஜக வென்றால் மோடி பிரதமராகக் கூடாது

image

மோடி மீண்டும் பிரதமராகக் கூடாது என சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மோடி அல்லாத வேறு ஒருவர் அந்த பதவிக்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற அவர், மோடி ஆட்சியில் இந்தியாவில் எந்தவொரு துறையும் வளர்ச்சி அடையவில்லை என்றார். மேலும் பேசிய அவர், பிரதமரின் பொறுப்பற்ற ஆட்சியால், இந்தியாவுடன் நட்பாக இருந்த நாடுகள் கூட, தற்போது எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

Similar News

News March 30, 2026

BREAKING: திமுகவில் இணைந்தார்.. இபிஎஸ் அதிர்ச்சி

image

மதுரை கிழக்கு தொகுதியின் அதிமுக Ex MLA தமிழரசன், சென்னையில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அவருடன் மேலூர் ஊராட்சி Ex ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி, மேலூர் நகர்மன்ற உறுப்பினர் திவாகர் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்துள்ளனர். இந்த இணைப்பின்போது அமைச்சர் மூர்த்தி உடனிருந்தார். தேர்தல் நேரத்தில் முக்கிய நிர்வாகிகள் விலகுவது EPS தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

News March 30, 2026

இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட்டே வேண்டாம்!

image

பக்ரா-நங்கல்(பஞ்சாப் – இமாச்சல பிரதேசம்) ரயிலில் மட்டும் டிக்கெட் இல்லாமல் பயணிக்க முடியும். 1948-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவை, பக்ரா-நங்கல் அணையின் கட்டுமானத்தில் முக்கிய பங்காற்றியதாம். அன்று இலவசமாக இயக்க தொடங்கப்பட்டு, இன்றும் அதே தொடர்கிறது. சட்லஜ் நதியை கடந்து சிவாலிக் மலைகளில் ஏறி இறங்கி 13 கி.மீ தூரம் இயற்கையை வருடி செல்லும் இந்த ரயிலானது 6 ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.

News March 30, 2026

எடப்பாடியில் EPS ஜெயிப்பாரா பார்ப்போம்: செங்கோட்டையன்

image

தமிழ்நாட்டின் நாளைய நம்பிக்கை நட்சத்திரமாக விஜய் இருப்பதாக செங்கோட்டையன் பேசியுள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகதான் வெல்லும் என EPS கூறியதற்கு பதிலளித்த அவர், எடப்பாடி தொகுதியிலேயே EPS-ஆல் வெற்றிப்பெற முடியுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார். கோபிசெட்டிபாளையத்தில் 9 முறை வெற்றிபெற்றதை மக்கள் தனக்கு அளித்த மாபெரும் கொடையாக கருதுவதாகவும் அவர் கூறினார்.<<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!