News June 16, 2024
ஸ்டாலினை பார்த்து மோடி பயந்தாக வேண்டும்: ஆ.ராசா

முதல்வர் ஸ்டாலினை பார்த்து பிரதமர் மோடி பயந்துதான் ஆக வேண்டும் என திமுக MP ஆ.ராசா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் நீலகிரியில் போட்டியிட்ட ஆ.ராசா வெற்றி பெற்றார். இதையடுத்து அந்த தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று மக்களுக்கு நன்றி கூறினார். அப்போது பேசிய ஆ.ராசா, சீனா, அமெரிக்காவைப் பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறாரோ இல்லையோ? முதல்வர் ஸ்டாலினை பார்த்து பயந்து தான் ஆக வேண்டும் என்றார்.
Similar News
News September 13, 2025
நேபாளத்தில் உள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள்

நேபாளத்தில் நடைபெற்ற போராட்டத்தை அடுத்து, தற்போது இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்நிலையில், அங்கு சுற்றுலா சென்ற 116 தமிழர்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளனர். மேலும், நேபாளில் சிக்கியுள்ள தமிழர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. தொலைபேசி எண்: 011 – 24193300. மொபைல் எண்/ வாட்ஸ்அப்: 9289516712. இமெயில்: tnhouse@tn.gov.in, prcofficetnh@gmail.com.
News September 13, 2025
மூலிகை: மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள நிலவேம்பு!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
➥நிலவேம்பை உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து அருந்தி வந்தால், பித்தம் குறையும்.
➥நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து, காலை மாலை என குடித்து வந்தால், காய்ச்சல் குணமாகும்.
➥நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.
➥நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். Share it to friends.
News September 13, 2025
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: CM ஸ்டாலின்

செப்.15-ம் தேதி தயாராக இருக்க திமுகவினருக்கு ஸ்டாலின் நாள்தோறும் புதிய கட்டளைகளை விடுத்து வருகிறார். தற்போது, ‘தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் ஆகியவற்றை எந்நாளும் காப்பேன்! ஆதிக்கச் சக்திகளின் முன் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என உறுதிமொழி ஏற்க தயாராகுங்கள் என ஆணையிட்டுள்ளார். அண்ணாவின் பிறந்தநாளில் 1 கோடி பேர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திமுக தீவிரப்படுத்தியுள்ளது.