News April 16, 2024
அம்மா உணவகம் போல் மோடி உணவகம்

தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை, #அக்கா1825 என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 5 வருடங்களுக்கு 365 நாட்களும் பணியில் இருப்பேன் என உறுதியளித்த அவர், அம்மா உணவகம் போல் ரயில் நிலையங்களில் மோடி உணவகம், தென் சென்னையில் ஒவ்வொரு பேரவை தொகுதிக்கும் ஒரு கலை – அறிவியல் கல்லூரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
Similar News
News October 17, 2025
ChatGPT, Gemini-ஐ பின்னுக்கு தள்ளிய Perplexity AI

உலகளவில் எதற்கெடுத்தாலும் AI-ஐ பயன்படுத்துவது தான் டிரெண்ட். AI-யிடம் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்றாகி விட்டது. இதில் ChatGPT, Gemini தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த செயலிகளை பின்னுக்கு தள்ளி Perplexity இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. கூகுள் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதலிடம் பிடித்து, இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக உருவெடுத்துள்ளது.
News October 17, 2025
சற்றுமுன்: விஜய் அதிரடி உத்தரவு

கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து விஜய்யின் தேர்தல் பரப்புரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. தீபாவளிக்கு பிறகு கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க முடிவெடுத்துள்ள அவர், பரப்புரை பயணத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டு வருகிறார். அதற்கான பணிகளை மேற்கொள்ள தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முதல் மாநிலம் வரையிலான நிர்வாகிகள் நியமனத்தை விரைந்து முடிக்கவும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
News October 17, 2025
சாதி படுகொலைகள் மனதை காயப்படுத்துது: CM

தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவப்படுகொலைகள் மனதை காயப்படுத்துவதாக CM ஸ்டாலின் பேரவையில் வேதனை தெரிவித்துள்ளார். ஒருவர் இன்னொருவரை கொல்வதை எக்காரணத்தை கொண்டும் ஏற்கமுடியாது என்ற அவர், தமிழ் மண்ணில் ஒற்றுமை உணர்வு உரக்க ஒலிக்கவேண்டும் என கூறியிருக்கிறார். மேலும், உலகம் முழுக்க பெருமிதத்தோடு வாழும் தமிழ் சமூகம் உள்ளூரில் சண்டையிட்டுக் கொள்ளலாமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.