News March 18, 2024
அஞ்சலி செலுத்திய மோடி

கோவை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். 1998 பிப்.14ஆம் தேதி கோவையில் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 11 இடங்களில் 12 கி.மீ சுற்றுவட்டத்தில் மொத்தம் 13 குண்டுகள் வெடித்தன. அல் உம்மா என்ற தீவிரவாத அமைப்பு நடத்திய இந்தத் தொடர் குண்டுவெடிப்பில் 35 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 46 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவுக்கூறத்தக்கது.
Similar News
News September 17, 2025
காதலன் இறந்த சோகத்தில் காதலி தற்கொலை

துணை இறந்தால் உயிரை மாய்க்கும் அன்றில் பறவையை போல் தமிழகத்தில் ஒரு காதல் ஜோடி சோக முடிவை எடுத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே இளைஞர் பூபதி(21), 12-ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஜோடிகள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதில், மனமுடைந்த பூபதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலன் இறந்த துக்கம் தாளாமல் அந்த மாணவியும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இது சரியா?
News September 17, 2025
SBIயில் கொள்ளை: ₹20 கோடி மதிப்பிலான நகை திருட்டு

கர்நாடகாவின் சடச்சான் SBI வங்கியில் இருந்து 20 கோடி மதிப்புள்ள தங்க நகை, ஒரு கோடி ரொக்கத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துள்ளது. ராணுவ உடையில் கையில் துப்பாக்கியுடன் நேற்று மாலை அந்த வங்கிக்குள் ஒரு கும்பல் நுழைந்துள்ளது. பதறிப்போன வங்கி ஊழியர்களை, மிரட்டி கழிப்பறையில் அடைத்து வைத்துள்ளனர். பின்னர் மேலாளரிடம் இருந்து சாவிகளை பறித்த அக்கும்பல், நகை மற்றும் பணத்துடன் மகாராஷ்டிராவுக்கு தப்பியுள்ளனர்.
News September 17, 2025
ரேஷன் பொருள் வாங்க ‘மொபைல் முத்தம்மா’ திட்டம்

ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கிட சரியான சில்லறை இல்லாம கஷ்டப்படுறீங்களா? இதற்கு தீர்வு காண ‘மொபைல் முத்தம்மா திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பொருள்கள் வாங்கும் போது ரொக்கமாக செலுத்தாமல், ரேஷன் கடையில் உள்ள QR code-ஐ வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலில் ஸ்கேன் செய்து பணப் பரிவர்த்தனை செய்யலாம். பணம் அரசின் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுவதால் முறைகேடுகளும் தடுக்கப்படும்.