News April 14, 2025

அம்பேத்கர் பெயரை பேச மட்டும் செய்கிறார் மோடி: கார்கே

image

மோடி அரசு, அம்பேத்கர் பெயரை பேச்சளவிற்கே பயன்படுத்துகிறது, அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற எதுவும் செய்யவில்லை என்று மல்லிகார்ஜூன கார்கே சாடியுள்ளார். தலித்துகளை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் இருப்பதாகவும், அதை மோடி அரசு பின்பற்றுவதில்லை என்றும் அவர் சாடியுள்ளார். தலித்துகள், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் அவமதிக்கப்படுகையில், பிரதமர் மோடி மவுனம் காப்பதாகவும் கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.

Similar News

News January 15, 2026

புதுக்கோட்டை: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

புதுக்கோட்டை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in என்ற<<>> இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News January 15, 2026

₹20 லட்சம் வேணுமா? இதோ இருக்கு அசத்தல் திட்டம்

image

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ₹28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் ₹20 லட்சம் தொகையை பெறலாம். உங்களால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியவில்லை என்றால், தினமும் ₹50 செலுத்துங்கள். 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ₹1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை பெறலாம். இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.

News January 15, 2026

விபத்தில் 6 பெண்கள் பலி.. பொங்கல் நாளில் சோகம்!

image

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் கார் – லாரி மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த 6 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 3 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகர சங்கராந்தி விழாவுக்கு(வட மாநிலங்களின் பொங்கல்) பதேபூருக்கு சென்றபோது விபத்து நிகழ்ந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.

error: Content is protected !!