News November 19, 2024

உலகத் தலைவர்களை சந்தித்த மோடி!

image

பிரேசிலில் நடைபெற்று வரும் ஜி 20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். இந்நிலையில், இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பல்வேறு நாட்டு அதிபர்களை மோடி சந்தித்து பேசியுள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், எகிப்து அதிபர் அப்டேய் ஃபட்டா, தென் கொரிய அதிபர் யூன் சூக் உள்ளிட்ட உலகத் தலைவர்களை மோடி தனித்தனியே சந்தித்து மோடி உரையாடி வருகிறார்.

Similar News

News November 19, 2024

INDW-AUSW: இந்திய அணி அறிவிப்பு

image

இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ODI தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியை BCCI அறிவித்துள்ளது. அணி ஹர்மன்ப்ரீத் (C), மந்தனா, பிரியா புனியா, ஜெமிமா, ஹார்லின் தியோல், யாஷிகா பாடியா(w), ரிச்சா கோஷ்(w), தேஜல் ஹசப்னிஸ், தீப்தி, மின்னு மனி, பிரியா மிஷ்ரா, ராதா யாதவ், டைட்டஸ் சாது, அருந்ததி ரெட்டி, ரேனுகா, சைமா தாகோர்.

News November 19, 2024

இறந்த பாகனை எழுப்ப முயன்ற தெய்வானை!

image

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானையை பாகனின் உறவினர் சிசுபாலன், நீண்டநேரம் தொட்டபடி செல்ஃபி எடுத்துள்ளார். புதிய நபர் தன்னை தொடுவதை விரும்பாத தெய்வானை, அவரை தாக்கியுள்ளது. அதை தடுக்க வந்த பாகனையும் தாக்கி இருக்கிறது. பின்னர், பாகனை தாக்கி விட்டோமே என்ற வேதனையில் அவரை எழுப்ப முயன்றுள்ளது. ஆனால் அவர் எழுந்திருக்காததால் கோபத்தில் மீண்டும் சிசுபாலனை தாக்கியதாக யானை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

News November 19, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) எல்நினோ என்பதன் தமிழாக்கம் என்ன? 2) RPU என்பதன் விரிவாக்கம் என்ன? 3) இந்தியாவில் வரதட்சணை தடைச் சட்டம் எந்தாண்டு நிறைவேற்றப்பட்டது? 4) நிறங்களின் தீவிரத்தை ஒப்புநோக்க உதவும் கருவி எது? 5) எலியின் அறிவியல் பெயர் என்ன? 6) ‘திரவிடத்தாய்’ என்ற நூலின் ஆசிரியர் யார்? 7) புகையும் கந்தக அமிலம் எது? 8) சீன நாணயத்தின் பெயர் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.