News September 4, 2025
சோனியா காந்தி பற்றி மோடி அவதூறாக பேசினார்: தேஜஸ்வி

யாருடைய தாயாரையும் அவதூறாக பேசக்கூடாது என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். PM மோடியின் தாயார் பற்றி காங்., கட்சியினர் அவதூறாக பேசியதற்கு எதிராக இன்று NDA கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, சோனியா காந்தி குறித்து மோடி அவதூறாக பேசியதாகவும், நிதிஷ் குமாரின் DNA பற்றி கேள்வி எழுப்பியதாகவும் கூறி சாடியுள்ளார். இது தற்போது விவாதமாகியுள்ளது.
Similar News
News December 26, 2025
தொடரும் அரசு பஸ் விபத்துகள்: TNSTC முக்கிய உத்தரவு

அரசு பஸ்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இந்நிலையில், TNSTC முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, டயர்களின் தரம், பிரேக் சிஸ்டம் உள்ளிட்டவற்றை டிரைவர்கள் & தொழில்நுட்ப வல்லுநர்கள் பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பஸ்களின் தற்போதைய நிலை குறித்து பணிமனை மேனேஜர்கள் தினமும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
News December 26, 2025
பொங்கல் பரிசுத் தொகை.. இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி

பொங்கலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், பரிசுத்தொகுப்பு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்புடன் ₹3,000 பரிசுத் தொகையும் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், மகளிர் உரிமைத்தொகை ₹1,000, பொங்கலுக்கு முன்னதாகவே கிரெடிட் செய்யப்படுமாம். இதனால் அரசு பொங்கல் பரிசாக ₹4,000 வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 26, 2025
மத அரசியலை பாஜக செய்யவில்லை: அண்ணாமலை

மத உணர்வுகளால் அரசியல் செய்யும் பாஜக தமிழகத்தில் வர முடியாது என CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்நிலையில், மத அரசியல் செய்வது பாஜக இல்லை என அண்ணாமலை பதிலளித்துள்ளார். கிறிஸ்துமஸுக்கு சர்ச், ஈத்-க்கு வாழ்த்து, தீபாவளி கொண்டாட்டம் என PM மோடி இருக்கிறார். கிறிஸ்துமஸ், ஈத்-க்கு முதல் ஆளாக செல்வேன், ஆனால் தீபாவளிக்கு வாழ்த்து கூற மாட்டேன் என்பது மத அரசியல் இல்லையா என கேள்வி எழுப்பினார்.


