News March 18, 2025
டிரம்பின் சோஷியல் மீடியாவில் இணைந்த மோடி!

அமெரிக்க அதிபர் டிரம்பின் மீடியா மற்றும் டெக்னாலஜி குழுமத்துக்கு சொந்தமான ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் பிரதமர் மோடி இணைந்துள்ளார். இதில் கடந்த 16 ஆம் தேதி அமெரிக்க தொகுப்பாளர் லெக்ஸ் பிரிட்மேனுடன் பிரதமர் மோடி கலந்துரையாடிய வீடியோவை டிரம்ப் பகிர்ந்துள்ளார். இந்த சமூக ஊடக தளத்தில் இணைந்துள்ள பிரதமர் மோடி, தனது கலந்துரையாடல் வீடியோவை பகிர்ந்த டிரம்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
Similar News
News March 18, 2025
உயர்ந்த மனிதர் காலமானார்!

உலகின் உயரமான மனிதர்களில் ஒருவரான பாகிஸ்தானை சேர்ந்த நசீர் சூம்ரோ (55), உடல்நலக்குறைவால் காலமானார். சிந்து மாகாணத்தை சேர்ந்தவரான நசீர், 7 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவர். சராசரி மனிதர்களை விட இவர் 3 அடி உயரம் கொண்டவர். நுரையீரல் நோயாலும், உடல் இணைப்பு பகுதிகளில் வலியாலும் பல ஆண்டுகளாக அவதியுற்று வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். பாகிஸ்தானின் அடையாளமாக உலகம் முழுவதும் வலம் வந்தவர் சூம்ரோ.
News March 18, 2025
இந்தியா, பாகிஸ்தான் ராணுவம் உருவான கதை (1/2)

1947இல் பிரிட்டிஷார் சுதந்திரம் அளிக்கும் முன்பு, நாட்டை இந்தியா, பாகிஸ்தான் என 2 நாடுகளாக பிரித்தனர். அப்போது 1947 ஆகஸ்ட் 14இல் பிரிட்டிஷ் இந்திய ராணுவம் கலைக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய ராணுவ வீரர்கள், இந்தியா அல்லது பாகிஸ்தான் என விரும்பிய பக்கம் சேர வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்திய ராணுவத்தின் பக்கம் 2.60 லட்சம் வீரர்களும், பாகிஸ்தான் பக்கம் 1.31 லட்சம் வீரர்களும் சேர்ந்தனர்.
News March 18, 2025
இந்தியா, பாகிஸ்தான் ராணுவம் உருவான கதை (2/2)

கூர்க்கா படையை சரிபாதியாக இந்தியாவும், பிரிட்டனும் தங்களுக்குள் பிரித்து கொண்டன. பிரிட்டிஷ் விமானப்படையில் இருந்த 10,000 பேர் இந்திய விமானப்படையிலும், 3,000 பேர் பாகிஸ்தான் விமானப்படையிலும், பிரிட்டிஷ் கடற்படையில் இருந்த 8,700 பேரில் 5,700 பேர் இந்திய கடற்படையிலும், எஞ்சிய 3,000 பேர் பாகிஸ்தான் கடற்படையிலும் இணைந்தனர். இவை அனைத்தும் பிரிட்டிஷ் ராணுவம் மேற்பார்வையில் நடந்து முடிந்தது.