News April 9, 2024
மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் மோடி

பிரதமர் மோடி மக்களை தவறாக வழிநடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக மீண்டும் தேர்தலை சந்திக்கிறது. 10 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை கூறுவதை விடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து பிரதமர் மோடி பேசி வருகிறார். இதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.
Similar News
News March 16, 2026
தவெகவுடன் கூட்டணி? சற்றுநேரத்தில் அறிவிக்கிறார்

தவெக கூட்டணியில் ராமதாஸ் (பாமக) இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சற்றுநேரத்தில் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை செங்கோட்டையன் சந்திக்கவிருக்கிறார். இந்த சந்திப்பிற்கு பின், கூட்டணி, எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது குறித்து ராமதாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, சசிகலாவும் ராமதாஸை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News March 16, 2026
விருத்தாசலமா, விருகம்பாக்கமா? பிரேமலதா குழப்பம்

விருகம்பாக்கம் தொகுதியில் பிரேமலதா (அ) விஜய பிரபாகரனை களமிறக்க திமுக தலைமை விரும்புகிறதாம். இதனால், 2006-ல் விஜயகாந்த் வென்ற விருத்தாசலத்தில் போட்டியிட விரும்பிய பிரேமலதா குழப்பத்தில் ஆழ்ந்துள்ளாராம். NDA-வில் விருத்தாசலம் தொகுதியில் பாமக சார்பில் மயிலம் MLA சிவக்குமார் போட்டியிட தீவிரம் காட்டி வருகிறார். இதனால், அங்குப் போட்டியிட்டால் எளிதில் வெல்லலாம் என தேமுதிக தரப்பு முனைப்பு காட்டுகிறதாம்.
News March 16, 2026
நீங்க Induction ஸ்டவ்வை பயன்படுத்துகிறீர்களா?

நீங்கள் Induction ஸ்டவ்வை பயன்படுத்துகிறீர்கள் என்றால் சில விஷயங்களை கண்டிப்பாக மறக்கக்கூடாது. *சமைக்க ஸ்டீல் பாத்திரங்களையே பயன்படுத்துங்கள். *அடுப்புக்கு கீழிருக்கும் மின்விசிறி அருகே எதுவும் வைக்காதீர்கள். *அடுப்பின் மீது தண்ணீர் சிந்தினால் அடுப்பை அணைத்தவுடன் சுத்தம் செய்யுங்கள். *அடுப்பின் மீது பாத்திரங்களை தேய்க்காமல் தூக்கி பயன்படுத்துங்கள். *அடுப்பிற்கு அருகில் மொபைல் போனை வைக்காதீர்கள்.


