News March 28, 2024
மோடி உலக நாடுகளின் சமரசத் தலைவர்

உலக நாடுகளில் ஏற்படும் பிரச்னைகளை சமரசம் செய்யும் முக்கிய தலைவராக மோடி உள்ளதாக புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுவை பாஜக வேட்பாளரும் தனது மருமகனுமான நமச்சிவாயத்தை ஆதரித்து பரப்புரை செய்த அவர், “பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். இத்தொகுதி வேட்பாளர் நமச்சிவாயம் மக்களவைக்கு செல்ல வேண்டும். அவர் வென்றால் புதுவைக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் கிடைக்கும்” என்றார்.
Similar News
News December 5, 2025
இண்டிகோவில் மட்டும் ஏன் பிரச்னை? என்ன நடக்கிறது?

மற்ற அனைத்து விமான நிறுவனங்களும் வழக்கம்போல் இயங்கும்போது. இண்டிகோவில் மட்டும் ஏன் பிரச்சனையாக இருக்கிறது? DGCA-வால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட, விமானிகளுக்கு கூடுதலாக ஓய்வு நேரம் என்ற விதி முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இதற்காக DGCA 6-18 மாதம் கால அவகாசமும் வழங்கியது. இருப்பினும், இண்டிகோ கூடுதலாக ஒரு விமானியை கூட பணியமர்த்தவில்லை. இதுவே இந்த குழப்பங்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
News December 5, 2025
பாக்.,ல் இந்து கோயில்களின் நிலைமை இதுதான்

பாகிஸ்தானில் உள்ள 1,871 கோயில்களில் 37 மட்டுமே இயங்குவதாக அந்நாட்டு பார்லி., குழு முன் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சொத்து மீட்புக் குழு (ETPB) கோயில்களை முறையாக பராமரிக்க தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இக்குழுவின் தலைமைப் பதவியை முஸ்லிம் அல்லாத நபர் ஒருவருக்கு வழங்கவேண்டும் என அங்குள்ள சிறுபான்மையினர் கோரிக்கை வைக்கின்றனர்.
News December 5, 2025
சற்றுமுன்: விஜய்யை சந்தித்தார் அடுத்த முக்கிய தலைவர்

சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில், விஜய்யை காங்., மூத்த நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்துள்ளார். ராகுல் காந்திக்கு நெருக்கமானவரான <<18458010>>பிரவீன்<<>>, சமீபத்தில் தவெகவை புகழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதில், கூட்டணி தொடர்பாக பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது. தவெக – காங்., கூட்டணி அமையுமா?


