News May 9, 2024
மோடி மீண்டும் பொய் பிரசாரம் செய்கிறார்

ராமர் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால், காங்கிரஸ் ‘பாபரின் பெயரால்’ ராமர் கோயிலுக்கு பூட்டு போட்டுவிடும் என மோடி குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா, மோடி மீண்டும் மீண்டும் அப்பட்டமான பொய் பிரசாரம் செய்வதாகத் தெரிவித்தார்.
Similar News
News August 20, 2025
வெண்கலப் பதக்கம் வென்றார் மனு பாக்கர்

கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் மனுபாக்கர் 219.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். சீனாவை சேர்ந்த குயிங்கி மா 243.2 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கமும், கொரியாவை சேர்ந்த ஜின் யாங் 241.6 புள்ளிகள் பெற்று வெள்ளியும் வென்றனர். அணி பிரிவில் மனுபாக்கர், சுர்சி சிங், பாலக் இணைந்து 1730 புள்ளிகள் பெற்று 3-ம் இடம்பிடித்தனர்.
News August 20, 2025
அர்ஜுன் தாஸுடன் நடிக்கும் ஐஸ்வர்யா லக்ஷமி

மாரி 1, 2 பாகங்கள், காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். இவர் தற்போது காதல் மற்றும் காமெடி கலந்த வெப்தொடர் ஒன்றை இயக்குகிறார். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கட்டா குஸ்தி, பொன்னியன் செல்வன் 1, 2 பாகங்களில் நடித்த ஐஸ்வர்யா லக்ஷமி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
News August 20, 2025
உலகின் காமெடியான விலங்குகள்

நமக்குத் தெரியாமல் நம்மை யாராவது போட்டோ எடுத்தால், அதில் நாம் காமெடியாக ஏதாவது செய்திருப்போம். அது போல தான் விலங்குகளும் சில நேரங்களில் காமெடியாக போட்டோக்களில் சிக்கிவிடுகின்றன. இப்படி காமெடி விலங்குகளை போட்டோ எடுப்பவர்களுக்காக போட்டிகள் எல்லாம் நடத்தப்படுகின்றன. அப்படியான போட்டியில் பகிரப்பட்ட சில போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம், Swipe செய்து பார்க்கவும்.