News September 21, 2025
2034 வரை மோடி தான் PM வேட்பாளர்: ராஜ்நாத் சிங்

2034 வரை மோடி தான் பாஜகவின் PM வேட்பாளர் என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 1980 முதல் மோடியுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், அவரைப் போன்ற மக்களிடம் நெருக்கமாக தொடர்பில் இருக்கும், பிரச்னைகளை எளிமையாக அணுகும் ஒரு தலைவனை இதுவரை பார்த்ததில்லை என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும், சர்வதேச பிரச்னைகளுக்கு உலக நாடுகளின் தலைவர்களே PM மோடியுடன் ஆலோசனை கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 21, 2025
இன்றே கடைசி: வங்கிகளில் 13,217 பணியிடங்கள்

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 18 – 40 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST, OBC பிரிவினருக்கு தளர்வு உண்டு. ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். <
News September 21, 2025
போக்சோவில் புகாரளிக்க கால நிர்ணயம் கிடையாது: கோர்ட்

மைனராக இருந்த போது நடந்த பாலியல் குற்றங்களுக்கு, மேஜரான பின்பும் புகார் அளிக்கலாம் என மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. போக்சோ வழக்கில் புகார் அளிப்பதற்கு கால வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை எனவும், குற்றவாளிகள் பெரும்பாலும் தெரிந்த நபர்களாக இருப்பதால், குழந்தைகளால் புகார் அளிக்க முடியாது என்றும் கூறியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் மேஜரான பின்னரும் அதிர்ச்சியை சுமப்பதாகவும் தெரிவித்துள்ளது.
News September 21, 2025
நாங்கள் முழுநேர அரசியல்வாதிகள் அல்ல: கமல்

தங்கள் கட்சியில் யாருமே 24*7 அரசியல்வாதி கிடையாது என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அனைவருமே வேலை பார்ப்பவர்கள் எனவும், அவர்களின் வேலையை செய்து கொண்டே, மீதமிருக்கும் நேரத்தில் கட்சிப் பணிகளை செய்வார்கள் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும், மக்கள் நீதி மய்யம் நூறாண்டுகள் செயல்பட வேண்டும் எனவும், தேர்தல் பிரசாரம் குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.