News May 3, 2024

வாரணாசியை விட்டு ஓடப் போகிறார் மோடி

image

வாரணாசி தொகுதியை விட்டு பிரதமர் மோடி ஓடப் போவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, வயநாடு, ரேபரேலி தொகுதிகளை விட்டு ஓடப் போவதாக பிரசாரத்தின்போது மோடி தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கார்கே, மோடிதான் வாரணாசியை விட்டு ஓடப் போகிறார் என்று பதிலடி கொடுத்தார்.

Similar News

News August 13, 2025

திமுக ஆட்சியை அகற்றும் நேரம் வந்துவிட்டது: கி.சாமி

image

கவின் ஆணவக்கொலையால் தமிழகத்திற்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. திமுக, அவர்களது கொள்கையை விட்டு வெகுதூரம் சென்று விட்டது என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். டாஸ்மாக்கை திறந்து வைத்து விட்டு, உங்களுடன் ஸ்டாலின் என்பது ஏமாற்று வேலை. திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டதாகவும் தெரிவித்தார். இதன் மூலம், திமுக கூட்டணியில் புதிய தமிழகம் இணையாது என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.

News August 13, 2025

SPORTS ROUNDUP: மகளிர் ODI WC.. பெங்களூருவில் இருந்து மாற்றம்

image

◆சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அனிசிமோவா(USA) & ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சிட்சிபாஸ்(கிரீஸ்) ஆகியோர் அதிர்ச்சி தோல்வி.
◆2-வது T20: 53 ரன்கள் வித்தியாசத்தில் SA வெற்றி. முதலில் ஆடிய SA 20 ஓவர்களில் 218/7, AUS 17.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்.
◆மகளிர் ODI WC: பெங்களுரூவில் நடக்கவிருந்த அனைத்து போட்டிகளும் வேறு மைதானத்திற்கு மாற்றப்படுவதாக தகவல்.

News August 13, 2025

CM தலைமையில் இன்று கூடும் அமைச்சரவை

image

CM ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இம்மாத இறுதியில் CM, தொழில் முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு செல்ல உள்ளதால், அதுபற்றியும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

error: Content is protected !!