News May 16, 2024
இந்து-முஸ்லிம்களை வைத்து அரசியல் செய்கிறார் மோடி

ரேபரேலியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து சகோதரி பிரியங்கா ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறை கூட பொதுமக்களை மோடி நேரில் சந்திக்கவில்லை. ஆனால், தனது பாட்டி இந்திரா காந்தி நடைபயணமாக வந்து மக்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் என்று கூறினார். இந்து-முஸ்லிம்களை வைத்து மோடி அரசியல் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News November 27, 2025
ஆதார் குடியுரிமைக்கான சான்று கிடையாது: SC

ஆதாரை குடியுரிமைக்கான சான்றாக கருத முடியாது என SIR-க்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையில் SC கருத்து தெரிவித்துள்ளது. ஆதார் என்பது குடிமக்கள் சலுகைகளை பெறுவதற்கான ஆவணம் மட்டுமே. ஒருவருக்கு ரேஷன் வாங்குவதற்காக ஆதார் வழங்கினால், வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், வரும் டிச.1-க்குள் TN அரசு தாக்கல் செய்த மனுவிற்கு ECI விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
News November 27, 2025
2026-ல் சீமான் போட்டியிடும் தொகுதி இதுவா?

2026 சட்டமன்ற தேர்தலில் சீமான், காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காரைக்குடியில் நாதக சார்பில் இன்று நடைபெறும் மாவீரர் நாள் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, 2016-ல் கடலூரிலும், 2021-ல் திருவொற்றியூரிலும் போட்டியிட்டு சீமான் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
News November 27, 2025
சற்றுமுன்: அனைத்து பள்ளிகளுக்கும்.. HAPPY NEWS

அரசு பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இம்மாதம் ‘காக்கா முட்டை’ படத்தை ஒளிபரப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஒளிபரப்புக்கான லிங்க் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. படம் திரையிடும் பணிகளை ஒருங்கிணைக்க பொறுப்பாசிரியரை நியமிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களே, படம் பார்க்க ரெடியா!


