News April 15, 2024
8வது முறையாக இன்று தமிழகம் வருகிறார் மோடி

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் 19ம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி இன்று 8வது முறையாக தமிழகம் வருகிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஹெலிகாப்டர் மூலம் மாலை 4.10 மணிக்கு நெல்லை அம்பாசமுத்திரம் வருகிறார். அங்கு, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு அவர் வாக்கு சேகரிக்கிறார்.
Similar News
News December 9, 2025
சன்னிலியோன் போட்டோவை வைத்து விளையாடிய அஸ்வின்

IPL மினி ஏலம் டிச.16 தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களின் பெயர்களை IPL டீம்களுக்கு Hint ஆக ரவிச்சந்திரன் அஸ்வின் கொடுத்து வருகிறார். அப்படி அவர் இன்று பதிவிட்ட போஸ்டில் சன்னிலியோன் + ஒரு தெரு(சந்து) போட்டோ இருந்தது. அந்த போட்டோவை வைத்து பார்க்கும் போது அவர் சொல்ல வந்த வீரரின் பெயர் தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் சன்னி சந்து என்பது தெரிய வருகிறது.
News December 9, 2025
‘பாசிச திமுக’ அரசின் முயற்சி முறியடிக்கப்படும்: நயினார்

நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்., கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என்று நயினார் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாட்டு உரிமையை நிலைநாட்டிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர இண்டியா கூட்டணியின் MP-க்கள் முன்னெடுத்திருப்பது வெட்கக்கேடானது எனக் கூறிய அவர், வழிபாட்டு உரிமையை முடக்க நினைக்கும் பாசிச திமுக அரசின் முயற்சி முறியடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
News December 9, 2025
நாளை முதல் அரையாண்டு தேர்வு.. மாணவர்களே ரெடியா!

தமிழகத்தில் நாளை(டிச.10) முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கவுள்ளன. 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு நாளை தேர்வுகள் நடக்க உள்ளன. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிச.15-ல் தேர்வுகள் தொடங்கும். டிச.23-ல் தேர்வுகள் நிறைவடைகின்றன. மாணவர்களே, *படிப்பதற்கு தேவையான நேரம் ஒதுக்குங்கள். *இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதை தவிருங்கள். *பதற்றமின்றி தேர்வுகளை எழுதுங்கள். ALL THE BEST


